புவெப்லா (நகரம்)

புவெப்லா (Puebla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈpweβla]), முறையாக இரோயிகா புவெப்லா டெ சரகோசா (Heróica Puebla de Zaragoza), புவெப்லா நகரம், புவெப்லா மாநிலத்தின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். மெக்சிக்கோவின் ஐந்து மிக முக்கியமான எசுப்பானியக் குடியேற்றங்களில் ஒன்றாகும்.[2] குடியேற்றக் காலத்தில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட இந்த நகரம் மெக்சிக்கோவின் மையப்பகுதியில் மெக்சிக்கோ நகரத்திலிருந்து தென்கிழக்கே 60 மைல்கள் (97 km) தொலைவிலும் மெக்சிக்கோவின் முதன்மையான அத்திலாந்திக்குப் பெருங்கடல் துறைமுக நகரமான வேராகுரூசுக்கு மேற்கிலும் இந்த இரு நகரங்களையும் இணைக்கும் தடத்தில் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.[3] தற்கால புவெப்லா மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட நகரமாகும்.

புவெப்லா
புவெப்லா
நகரம்/நகராட்சி
இரோயிகா புவெப்லா டெ சரகோசா
சரகோசாவின் வீர புவெப்லா

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): அமெரிக்காவின் தொல்லியல் சேகரிப்பு, தேவதைகளின் நகரம், ஏஞ்சலோபொலிசு

புவெப்லா மாநிலத்தில் அமைவிடம்

மெக்சிக்கோ நாட்டில் மாநிலத்தின் அமைவிடம்
நாடுமெக்சிக்கோ
மாநிலம்புவெப்லா
நகராட்சிபுவெப்லா நகராட்சி
நிறுவப்பட்டதுஏப்ரல் 16, 1531
நகராட்சித் தகுதி1821
பரப்பளவு
  நகராட்சி534.32
  நகர்ப்புறம்689
ஏற்றம் (of seat)2,135
மக்கள்தொகை (2010) Municipality
  நகராட்சி2
  பெருநகர்2
  Seat2
இனங்கள்Poblano
நேர வலயம்மத்திய சீர்தர நேரம் (ஒசநே−6)
  கோடை (பசேநே)மத்திய பகலொளி நேரம் (ஒசநே−5)
அஞ்சல் குறியீடு72000
தொலைபேசி குறியீடு222
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMX-PUE
GDP1.527 பில்லியன் பெசோக்கள்[1]
இணையதளம்(எசுப்பானியம்) அலுவல்முறை வலைத்தளம்
அலுவல் பெயர்வரலாற்றுச் சிறப்புமிக்க புவெப்லா நகரம்
வகைபண்பாடு
வரன்முறைii, iv
தெரியப்பட்டது1987 (11வது அமர்வு)
உசாவு எண்416
அரசு சார்புமெக்சிக்கோ
வலயம்இலத்தீன அமெரிக்காவும் கரிபியனும்

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரத்தை சரகோசாவின் வீர நகரம் என்றும் தேவதைகளின் நகரம் என்றும் ஓடுகளின் நகரம் என்றும் குறிப்பிடுகின்றனர். இது முழுமையாக எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்டமையால் இங்குள்ள கட்டிடக்கலையும் பண்பாடும் ஏனைய ஐரோப்பிய குடியேற்ற நகரங்களைப் போலவே உள்ளன. இக்காலத்திய நகரங்கள் பலவும் ஏற்கெனவே இருந்த தொல்குடி மக்களின் நகரங்களுக்குள் கட்டப்பட்டிருந்தன. புவெப்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க மையப்பகுதி குடியேற்றவாத எசுப்பானியப் பண்பாட்டிற்கான காட்சிக்கூடமாக விளங்குகின்றது. 17வது, 18வது நூற்றாண்டு ஐரோப்பியக் கட்டிடக் கலையை இங்கு காணலாம்.

புவெப்லாவின் தட்பவெப்பநிலை ஆண்டு முழுமையும் இதமாக உள்ளது.

மேற்சான்றுகள்

  1. "Puebla City." (2010). பார்த்த நாள் 2010-10-20.
  2. Seacord, Stephanie (2006-01-01). "On the road to becoming an authentic "poblano"". Mexconnect. பார்த்த நாள் 2009-10-21.
  3. Julia Hirshberg, “Social Experiments in New Spain: A Prosopographical Study of the Early Settlement at Puebla de Los Angeles, 1531-1534” , Hispanic American Historical Review vol. 59, 1979.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.