பள்ளத்தாக்கு
நிலவியலில், பள்ளத்தாக்கு என்பது, பெரும்பாலும் ஒரு திசையில் அமைந்திருக்கும் தாழ்ந்த நிலப் பகுதியாகும். பள்ளத்தாக்குகளின் வடிவத்தை விளக்குவதற்கு, U-வடிவம், V-வடிவம் போன்ற புவியியற் சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. பெரும்பாலான பள்ளத்தாக்குகள் U-வடிவமாகவோ, V-வடிவமாகவோ அல்லது இரண்டும் கலந்த வடிவம் கொண்டவையாகவோ இருக்கின்றன. குறைந்தது, பள்ளத்தாக்கின் இரு புறங்களிலும் அமைந்திருக்கும் குன்றுகளின் சரிவுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மேற்படி வடிவங்களைக் கொண்டிருக்கின்றன.

ஆற்றுப் பள்ளத்தாக்கு
நீர் ஓடுவதால் உருவாகும் பள்ளத்தாக்குகள் அல்லது ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பொதுவாக V-வடிவம் கொண்டவை. இத்தகைய பள்ளத்தாக்குகளின் சரியான வடிவம் அதனூடாகச் செல்லும் நீரோட்டத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கும். மலைத் தொடர்களில் இருப்பதைப் போன்ற சரிவு கூடிய ஆறுகள் சரிவு கூடிய சுவர்களையும் ஒடுங்கிய அடிப்பகுதியையும் கொண்டனவாகக் காணப்படுகின்றன. குறைவான சரிவுடன் கூடிய ஆறுகள் அகன்ற பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. ஆனால், ஆற்றின் கீழ்ப் பகுதிகளில் வண்டல் படிவுகள் ஏற்படத் தொடங்குவதால் இப்பகுதிகள் வெள்ளப்பெருக்குச் சமவெளிகள் ஆகின்றன.
முக்கிய பள்ளத்தாக்குகள்


- அபூரா பள்ளத்தாக்கு (கொலம்பியா)
- பரோசா பள்ளத்தாக்கு (ஆசுத்திரேலியா)
- கோக்கா பள்ளத்தாக்கு (கொலம்பியா)
- தன்யூப் பள்ளத்தாக்கு (கிழக்கு ஐரோப்பா)
- சாவுப் பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)
- பிரேசர் ஆற்றுப் பள்ளத்தாக்கு (Fraser Canyon) (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)
- பிரேசர் பள்ளத்தாக்கு (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)
- Glen Coe (இசுக்காட்லாந்து)
- Grand Canyon (அரிசோனா), (ஐக்கிய அமெரிக்கா)
- பெரும் கிளென் (இசுக்காட்லாந்து)
- பெரும் பிளவுப் பள்ளத்தாக்கு (ஜோர்தானில் இருந்து தெற்கு ஆப்பிரிக்கா வரை)
- நரக வாயில் (Hell's Gate) (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)
- ஹன்டர் பள்ளத்தாக்கு (ஆசுத்திரேலியா)
- ஹட் பள்ளத்தாக்கு (நியூசிலாந்து)
- சிந்துப் பள்ளத்தாக்கு (பாகிசுத்தான்)
- Iron Gate (ரோமானியா/சேர்பியா)
- லாசு வெகாசு பள்ளத்தாக்கு (நெவாடா), (ஐக்கிய அமெரிக்கா)
- லிட்டில் கொட்டன்வூட் கிறீக் பள்ளத்தாக்கு (உத்தா), (ஐக்கிய அமெரிக்கா)
- லொயர் பள்ளத்தாக்கு (பிரான்சு)
- Nant Ffrancon (வேல்சு)
- நாப்பா பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)
- நைல் பள்ளத்தாக்கு (எகிப்து/சூடான்/எதியோப்பியா/உகண்டா), (வடகிழக்கு ஆப்பிரிக்கா)
- ஒக்கனகன் பள்ளத்தாக்கு (பிரித்தானிய கொலம்பியா), (கனடா)
- ஒட்டாவா பள்ளத்தாக்கு (ஒன்டாரியோ/கியூபெக்), (கனடா)
- பாலோ துரோ Canyon (டெக்சாசு), (ஐக்கிய அமெரிக்கா)
- பஞ்ச்சிர் பள்ளத்தாக்கு (ஆப்கானித்தான்)
- மேல் ரைன் பள்ளத்தாக்கு, (பிரான்சு)
- ரோன் பள்ளத்தாக்கு Lyon (பிரான்சு)
- ரியோ கிராண்டே பள்ளத்தாக்கு (Texas), (USA)
- செயின்ட் லாரன்சு பள்ளத்தாக்கு, (ஒன்டாரியோ/கியூபெக்/நியூ யார்க்) (கனடா, ஐக்கிய அமெரிக்கா)
- சான் பெர்னான்டோ பள்ளத்தாக்கு (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)
- சிலிக்கன் பள்ளத்தாக்கு, (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)
- சொனோமா பள்ளத்தாக்கு, (கலிபோர்னியா), (ஐக்கிய அமெரிக்கா)
- தென் வேல்சுப் பள்ளத்தாக்குகள் (வேல்சு)
- Valley of flowers (இந்தியா)
- மன்னர்கள் பள்ளத்தாக்கு (எகிப்து)
- மெக்சிக்கோ பள்ளத்தாக்கு (Mexico), also known as "El Valle de México", see Mexico City
- சூரியப் பள்ளத்தாக்கு (அரிசோனா), (ஐக்கிய அமெரிக்கா)
- வில்லியமெட் பள்ளத்தாக்கு, (ஒரிகன்), (ஐக்கிய அமெரிக்கா)