புல்மோட்டை

புல்மோட்டை (Pulmoddai) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரத்தில் இருந்து 55 கி.மீ துாரத்தில் நிலாவெளிப் பாதையின் முடிவிலும், அனுராபுரத்தில் இருந்து 105 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நீா் நில வளங்களைக் கொண்ட இப்பிரதேசத்தின் நுழைவாயில் யான் ஓயா நதியினாலும் அதன் வனப்பினாலும் அழகு படுத்தப்படுகின்றது. வடக்கே கோகிளாய் வாவியும் அமைந்துள்ளது. இச்சிறிய கிராமத்தில் 15,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இப்பிரதேச மக்கள் மீன் பிடி, இறால் பிடித்தல் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களைப் பிரதானமாகக் கொண்டுள்ளனர். இங்கு இலங்கையின் முக்கிய வளங்களின் ஒன்றான இல்மனைட் தொழிற்சாலையம், அரிசிமலை கடற்கரையும் அமையப் பெற்றதனால் அதிகமான உல்லாசப் பயணிகளை கவரும் இடமாகக் காணப்படுகின்றது.

அரிசி மலை கடற்கரை

கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம் மாறிவருகின்றது. எழில் கொஞ்சும் காடுகளுடனான மலையடிவாரத்திற்கிடையில் காணப்படும் இக்கடற்கரை பிரதேசத்திலுள்ள மணல் அரிசியை ஒத்த அளவில் மென்மையானதாகக் காணப்படுவதால் இதனை அரிசி மலை கடற்கரை என நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரிசி மலை கடற்கரை பிரதேசம் பல அரியவகை உயிரினங்களைக் கொண்டுள்ளன. மேலும் இதனை பார்வையிட வருகைதரும் உல்லாசப் பிரயாணிகள் இவ் அரியவகை மண்களை எடுத்துச் செல்வதனால் இம்மண்வளம் அரிதாகி வருகின்றமை கவலைக்குரியதே.

இங்குள்ள பாடசாலைகள்

  • புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம்

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.