நிலாவெளி

நிலாவெளி (Nilaveli) என்பது திருகோணமலையிலிருந்து 09 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். இது உல்லாச பயணிகளுக்கான புகழ்பெற்ற இடமாகும். 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், ஈழப் போர் என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டாலும் இன்றைய கால கட்டங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவரும் ஒரு பிரதேசமாகும் வரலாற்று சிறப்பு மிக்க புறாத்தீவும் இங்குதான் அமைந்துள்ளது .

நிலாவெளி
Nillaveli Beach
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்திருகோணமலை
பிரதேச செயலாளர் பிரிவுகுச்சவெளி

கடற்கரை

நிலாவெளி கடற்கரை திருகோணமலை மாவட்டத்தில் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகளோடு கூடிய சிறந்த கடற்கரைப் பிரதேசம் என்பதால் இப்பிரதேசம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த பிரதேசமாக உள்ளது. சூரியக்குளியல், படகுபயணம், மற்றும் நீச்சல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த இடமாகும்.

குறிப்புக்கள்

    மேலதிக வாசிப்பு

    • Gunasingham, S. (1975). A Tamil slab inscription at Nilaveli. 1. Colombo: The Ceylon Journal of the Humanities. பக். 61–71.

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.