புரோட்டத்தூர்

புரோட்டத்தூர் (Proddutur) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும்.[7] பெண்ணாறு கரையில் அமைந்த புரோட்டாத்தூர் நகராட்சி, புரோட்டாத்தூர் மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். [8]கடப்பா மாவட்டத் தலைமையிட நகரமான கடப்பாவிற்கு வடமேற்கே 54.6 கிமீ தொலைவில் புரோட்டத்தூர் நகரம் அமைந்துள்ளது. [9]

புரோட்டத்தூர்
நகரம்
புரோட்டத்தூர்
ஆந்திர பிரதேசத்தில் புரோட்டத்தூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 14.73°N 78.55°E / 14.73; 78.55
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பிரதேசம்இராயலசீமை
மாவட்டம்கடப்பா மாவட்டம்
அரசு
  வகைநகராட்சி
  Bodyபுரோட்டத்தூர் நகராட்சி
பரப்பளவு[1][2]
  மொத்தம்21.06
ஏற்றம்[3]158
மக்கள்தொகை (2011)[4]
  மொத்தம்2
  அடர்த்தி10
மொழிகள்
  அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்516 360, 516361, 516362 [5]
தொலைபேசி குறியீடு எண்08564[6]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு[[ISO 3166-2:IN|]]
வாகனப் பதிவுAP-04 and AP-24
எழுத்தறிவு78.08%
இணையதளம்onlinepdtr.com

மக்கள்தொகையியல்

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புரோட்டத்தூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,63,970 ஆகும். அதில் ஆண்கள் 81,874 ஆகவும்; பெண்கள் 82,096 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1003 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்கள் 113,450 ( 77.67 %) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 16,653 ஆகவுள்ளனர். குழந்தைகள் பாலினவிகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 72.99 %; இசுலாமியர்கள் 25.58 %; மற்றவர்கள் 1.43% ஆகவுள்ளனர்.[10]

நகராட்சி நிர்வாகம்

7.1 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புரோட்டத்தூர் நகராட்சி 1915ல் நிறுவப்பட்டது. 1998ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயரந்தது.[11]

போக்குவரத்து

  • தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் அமைந்த புரோட்டத்தூர் நகரம், ஐதராபாத், பெங்களூர், சென்னை, விஜயவாடா மற்றும் கடப்பா நெடுஞ்சாலை வழியாக நகரங்களை இணைக்கிறது.
  • மூன்று நடைமேடைகள் கொண்ட புரோட்டத்தூர் தொடருந்து நிலையம் வழியாக நாளொன்றுக்கு ஆறு தொடருந்துகள் கடந்து செல்கிறது.[12]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Government of Andhra Pradesh. மூல முகவரியிலிருந்து 7 June 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2016.
  2. "Basic Information of Municipality". Government of Andhra Pradesh. பார்த்த நாள் 17 June 2015.
  3. "Elevation for Proddatur". Veloroutes. பார்த்த நாள் 3 September 2014.
  4. "Andhra Pradesh (India): Districts, Cities, Towns and Outgrowth Wards – Population Statistics in Maps and Charts".
  5. "IndiaPost – Pincode Search – Proddatur". New Delhi, India: India Post. பார்த்த நாள் 2009-10-19.
  6. "STD Codes (Andhra Pradesh)". Sarkaritel (2005). மூல முகவரியிலிருந்து 2009-09-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-10-19.
  7. "Mandal wise villages" (PDF). National Informatics Center. மூல முகவரியிலிருந்து 16 February 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 10 November 2014.
  8. "Part-III State Administrative Divisions 2001–2011" (PDF). Census of India. பார்த்த நாள் 18 January 2015.
  9. https://www.google.co.in/search?client=opera&q=kadapa+to+proddutur+distance&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8
  10. Proddatur City Census 2011 data
  11. "Proddatur Municipality". Municipal Administration & Urban Development Department, Govt. of Andhra Pradesh. பார்த்த நாள் 4 November 2015.
  12. https://indiarailinfo.com/departures/proddatur-prdt/10710
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.