புதுப்பிக்கவியலா மூலம்
புதுப்பிக்கவியலா மூலம் (non-renewable resource) அல்லது புதுப்பிக்கவியலா வளம் எனப்படும் இயற்கை வளமானது அது தீர்க்கப்படும் வீதத்தை நீடிக்குமளவு தயாரிக்க அல்லது பயிரிடப்பட அல்லது உருவாக்க அல்லது பயன்படுத்த இயலாத வளமாகும்; இது தீர்ந்துவிடுமானால் வருங்காலத் தேவைகளுக்கு இந்த வளம் கிடைக்காமற் போகும். இயற்கை உருவாக்கும் வீதத்தைவிட விரைவாக தீர்க்கப்படும் வளங்களும் புதுப்பிக்கவியலா வளங்களாகக் கருதப்படுகின்றன. புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி, பாறைநெய், மற்றும் இயற்கை எரிவளி, அணுக்கருவியல் மின்னாற்றல் (யுரேனியம்) மற்றும் நிலத்தடி நீர் ஆகியன சில எடுத்துக்காட்டுகளாகும். இவற்றிற்கு எதிராக, வெட்டுமரம் (நீடித்து கிடைக்குமாறு வெட்டுவதையும் வளர்ப்பதையும் சமனாக்கலாம்) அல்லது உலோகங்கள் (மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்) புதுப்பிக்கக்கூடிய வளங்களாக கருதப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- Non-Renewable Resources at NASA.gov
- Foclear energy at SourceWatch
- List of Non-Renewable energy sources