புதுப்பிக்கத்தக்க வளம்

புதுப்பிக்கத்தக்க வளம் (renewable resource) எனப்படுவது இயற்கையான செயல்பாடுகளால் புதுப்பிக்கப்படும் அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடிய ஓர் இயற்கை வளமாகும். இவை நமது இயற்கைச்சூழல் மற்றும் சூழ்நிலை மண்டலத்தின் அங்கங்களாக உள்ளன. இத்தகைய புதுப்பிக்கத்தக்க வளங்கள் தொழில் வளர்ச்சியால் பெரிதும் அச்சுறுத்தப்படுகிறது. இயற்கையால் இந்த வளங்கள் புதுப்பிக்கூடிய திறனளவைவிட விரைவாக அழிக்காது இவை கவனமாக மேலாளப்பட வேண்டும். இவற்றின் புதுப்பிக்கூடிய திறனளவை சீராக மதிப்பிட வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இயற்கைச் சூழலில் நீடித்திருக்க மிகவும் தேவையாகும்.

ஐசுலாந்தில் உள்ள நெசுயவெள்ளிர் புவிவெப்ப மின்நிலையம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
புதுப்பிக்கத்தக்க
ஆற்றல்
காற்றாலை
உயிரி எரிபொருள்
உயிர்த்திரள்
புவிவெப்பம்
நீர்மின்சாரம்
சூரிய ஆற்றல்
நீர்ப்பெருக்கு
ஆற்றல்

அலை ஆற்றல்
காற்றுத் திறன்

சூரிய ஒளி, நீர்ப்பெருக்கு, காற்று, புவிவெப்ப ஆற்றல், உயிர்த்திரள் போன்ற பிற இயற்கை மூலங்களும் புதுப்பிக்கத்தக்க வளங்களை வழங்கக்கூடியனவாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என அழைக்கப்படுகின்றன.

புதைபடிவ எரிமங்களான பாறைநெய், நிலக்கரி, இயற்கை எரிவளி, டீசல் போன்றவையும் செப்பு போன்ற பிற கனிமங்களும் நீடித்த ஈட்டமின்மையால் புதுப்பிக்கவியலா வளம் எனப்படுகின்றன.

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு காற்றாலை பண்ணை.

மேலும் தகவல்களுக்கு

  • www.ganesanboobeshnet.wordpress.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.