கடல் அலை ஆற்றல்

அலை மின்சாரம் அல்லது கடல்லை மின்சாரம் என்பது காற்றினால் நீரில் ஏற்படும் அலைகளில் பொதிந்துள்ள மின்சார ஆற்றலாகும். நீரலைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் நவீன கால மின்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாற்றல் எடுத்துக்காட்டாக மின் உற்பத்தி, உப்பகற்றல், நீர்ப்பாய்ச்சல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடல்லை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகையைச் சேர்ந்தது. கடல் அலையின் மூலம் பெறக்கூடிய ஆற்றல் அதன் உயரம், வேகம் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும்.

கடலில் இருந்து பெறப்படும் வற்றுப் பெருக்கு, கடல் ஓட்டம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் ஆற்றல் வகைகள் கடல்லை ஆற்றலிருந்து வேறுபட்டவையாகும். கடல்லை ஆற்றல் இன்று பெருமளவில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் 1890 களிலிருதே அதன் பயன்பாடு காணப்படுகிறது.[1] இலகின் முதல் வணிக அலைப் பன்னை போர்த்துகல்]]லில் அமைந்துள்ளது.[2] இப்பன்னை 750 கிலோவாட் திறனைக் கொண்டது.[3]

கடல் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் வீசும் காற்றினால் கடலில் அலை ஏற்படுத்தப்படுகிறது. கடல் அலைக்கு சற்று மேலாக வீசும் காற்றைவிட கடல் அலை மெதுவாக பயணிக்கும் வரையிலும் காற்றிலிருந்து கடல் அலைக்கு ஆற்றல் மாற்றப்படுகிறது.

அறிவியல் கோட்பாடு

நடப்பிலிருக்கும் அறிவியல் கோட்பாடுகளின்படி, எந்தவொரு ஆற்றலையும் உருவாக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது. ஆற்றலை ஒருநிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றம் செய்யவே முடியும். இந்த கோட்பாட்டின்படி காற்றிலுள்ள ஆற்றல் நீரின் அலை ஆற்றலாக உருவெடுத்துப் பின் நீரிலிருந்து இயக்க ஆற்றலாக உருவெடுத்து இறுதியில் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது.

பௌதிக விளக்கம்

அலைகளின் தோற்றம்

கடலின் மேற்பரப்பில் காற்று பலமாக வீசும்பொழுது காற்று நீரின் மேல் ஏற்படுத்தும் அழுத்தம் மற்றும் நீர் காற்றின் மேல் ஏற்படுத்தும் உராய்வு ஆற்றலால் கடலின் மேற்பரப்பில் அலைகள் தோன்றுகிறது. காற்றின் வேகம் அலைகளின் வேகத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் காற்றிலிருந்து நீருக்கு ஆற்றல் தாவல் நடக்கிறது. காற்றின் வேகத்தைப் பொறுத்து அலைகளின் உயரம் மற்றும் வேகம் அமைகிறது. நீரின் அடர்த்தியும் அலைகளின் உயரத்தை நிர்ணயிப்பதில் ஓரளவு பங்கெடுக்கிறது.

மின்சாரம் தயாரிக்கும் முறை

வேகமாக கடந்து செல்லும் நீரலைகளால் இழுசக்கரம் சுழற்றப்படுகிறது. இங்கு அலைகளின் இயக்க ஆற்றல் சக்கரங்களைச் சுழற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. சக்கரம் சுழலும்பொழுது அதனுடன் இணைக்கப்பட்ட காந்தங்களும் சுழல்கிறது. சக்கரத்தின் மத்தியில் ஒரு நிலைகாந்தம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இரு காந்தங்களின் சுழற்சியால் காந்த அலை கோடுகள் வெட்டப்பட்டு மின்சாரம் உருவாகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.