புதிய தலைமுறை (தொலைக்காட்சி)
புதிய தலைமுறை தொலைக்காட்சி என்பது தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இது 24X7 நேரலை செய்திகள் ஒளிபரப்பை 2011-ம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவக்கியது. தனி நபர், கொள்கை, குழு, அரசு மற்றும் நிறுவனங்கள் என யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செய்திகளை வெளியிடுவதில்லை என்கின்ற வலிமையான நெறிமுறைகளையும் கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்திப் பிரிவு கட்டமைக்கப்பட்டுள்ளதாக இத்தொலைக்காட்சி கூறுகிறது.
புதிய தலைமுறை (தொலைக்காட்சி) | |
---|---|
![]() | |
உண்மை உடனுக்குடன் | |
ஒளிபரப்பு தொடக்கம் | 24 ஆகத்து 2011 |
உரிமையாளர் | நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் பிரைவேட் லிட் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு |
வலைத்தளம் | www.puthiyathalaimurai.tv |
நோக்கம்
நடப்புச் செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதோடு விளையாட்டு, வணிகம், மற்றும் உலகச் செய்திகளையும் வழங்கி வருகிறது. மேலும் வார இறுதி நாட்களில் சமூக அக்கறையுடன் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
நிறுவனம்
சென்னையை மையமாகக் கொண்ட நியூ ஜெனரேசன் மீடியா கார்ப்பரேசன் நிறுவனம் புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தி வருகின்றது. இந்நிறுவனம், புதிய தலைமுறை மற்றும் புதிய தலைமுறை கல்வி ஆகிய இரண்டு தமிழ் இதழ்களையும் வெளியிடுகிறது.
செய்திக்குழு
இந்த நிறுவனத்திற்கு தமிழகம் முழுவதும் செய்தியாளர்கள் உள்ளனர். வட மாநிலச் செய்திகளை வழங்குவதற்கான மையம் டெல்லியில் உள்ளது.
அன்றாட நிகழ்ச்சிகள்
- புதிய விடியல்
- புதுப் புது அர்த்தங்கள்
- வணிகம்
- ஓடி விளையாடு
- கற்க கசடற
- உங்கள் ஊர் உங்கள் குரல்
- இன்றைய தினம்
- நேர்படப்பேசு[1]
- நாளைய நாளிதழ்
- விரைவு செய்திகள்
வார நிகழ்ச்சிகள்
- ரௌத்திரம் பழகு[2]
- அக்னி பரீட்சை
- களம் இறங்கியவர்கள்
- ஆயுதம் செய்வோம்
- நண்பர்கள்
- சினிமா 360 டிகிரி