பீட்டர் தீல்

பீட்டர் ஆண்ட்ரியாஸ் தீல்(அக்டோபர் 11, 1967 இல் பிறந்தார்) ஒரு அமெரிக்க தொழிலதிபர், துணிகர மூலதன நிபுணர், கொடையாளர், அரசியல் ஆர்வலர், மற்றும் எழுத்தாளர் ஆவார். $ 2.2 பில்லியன் மொத்த சொத்து மதிப்புடன் 2014 ஆம் ஆண்டின் List|ஃபோர்ப்ஸ் மிடாஸ் பட்டியலில் 4 வது இடத்திலும் மற்றும் $2.7 பில்லியன் மொத்த சொத்து மதிப்புடன் 2016 ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் 400 பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார்.

இவர் பேபால் நிறுவனத்தை கூட்டாகத் தொடங்கியவர்களில் ஒருவர். பேஸ்புக்கிலும் பெரிய அளவிலான பணத்தை முதலீடு செய்திருக்கிறார். அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.