பேபால்
பே பால் (PayPal) அமெரிக்காவிலிருந்து இயங்கும் உலகளாவிய மின் வணிக நிறுவனமாகும். இது வலைவழியே கட்டண செலுத்தவும் பண பரிமாற்றம் நடைபெறவும் வழிவகை செய்கிறது. வழமையான தாள் வடிவ பண அஞ்சல்/காசோலைகளுக்கு மாற்றாக அமைந்துள்ளது.
![]() | |
வகை | இபே நிறுவனத்தின் துணை நிறுவனம் |
---|---|
வகை | மின் வணிகம் |
நிறுவுகை | பாலோ ஆல்டோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (1998) |
நிறுவனர்(கள்) | கென் ஹௌரி மாக்ஸ் லெவ்சின் எலோன் முஸ்க் லூக் நோசெக் பீட்டர் தீல் |
தலைமையகம் | சான் ஹொசே, கலிபோர்னியா, அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முக்கிய நபர்கள் | பாட்றிக் துபுயிசு, சிஎஃப்ஓ |
வருமானம் | US$2.23 பில்லியன் (2009) |
உரிமையாளர்கள் | இபே நிறுவனம் |

துவக்கத்தில், ஓர் பேபால் கணக்கில் வங்கி கணக்கிலிருந்தோ கடனட்டை மூலமாகவோ பணம் போடக் கூடியதாகவிருந்தது. 2010இன் பின்பகுதி அல்லது 2011 துவக்கத்திலிருந்து தமது செலவுவரம்பை மீறும் கணக்காளர் உறுதிசெயப்பட்ட வங்கிக் கணக்கைத் தரவேண்டும் என பேபால் வலியுறுத்துகிறது. அதுமுதல் பேபால் வாங்கிய பொருட்களுக்கு ஓர் குறிப்பிட்ட வரிசையில் பணம் எடுத்துக் கொள்ளத் தொடங்கியது. "முதன்மை" எனக் குறிப்பிடப்பட்ட கணக்கிலிருந்து முதலில் எடுத்துக் கொள்ளும். இந்த வரிசை: (1) பேபால் கணக்கில் உள்ள மீதம்; (2) பேபால் கடன் கணக்கு, பேபால் எக்ஸ்ட்ராஸ், பேபால் ஸ்மார்ட்கனெக்ட், அல்லது பின்னர் பில் செய் (முதன்மையான பட்டுவாடா வளமாக தேர்ந்திருந்தால்); (3) உறுதிசெய்யப்பட்ட வங்கி கணக்கு; (4) பேபால் அல்லாத கடனட்டைகள் போன்ற பிற பட்டுவாடா வளங்கள்,[1]
பேபாலிடமிருந்து பணம் பெறுவோர் காசோலை மூலமாகவோ தங்கள் பேபால் வைப்பு கணக்கிலோ தங்கள் வங்கிக் கணக்கிற்கு பணபரிமாற்றம் மூலமாகவோ பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.
மேற்கோள்கள்
- "How can I make a credit card my primary funds source?" (2011-04-18).