பிலால்
பிலால் இப்னு ராபா அல் ஹபாஷி (Bilal ibn Rabah al-Habashi) அடிமையாக இருந்து இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டவர்களில் முதலாமவர். இவர் 578-582 காலப்பகுதியில் மெக்காவில் பிறந்த எத்தியோப்பியர் ஆவார்.
பிலால் (ரலி) Bilal ibn Rabah al-Habashi بلال بن رباح | |
---|---|
![]() பாரசீகத்தைச் சேர்ந்த இசுலாமிய சிற்பம் (10ம் நூற்றாண்டு), "பிலால் தொழுகைக்காக அழைத்தல்" | |
பிறப்பு | 580 மக்கா, அரேபியா |
இறப்பு | மார்ச்சு 2, 640 59) டமாஸ்கஸ் அல்லது மதீனா | (அகவை
சமயம் | இசுலாம் |
அபூபக்கரினால் விடுவிக்கப்பட்ட அடிமைகளில் இவரும் ஒருவர். சிறந்த குரல் வளம் படைத்தவர். இதனால் முகம்மது நபி அவர்கள் ஆப்பிரிக்க அடிமையாக இருந்த பிலாலைத் தனது தொழுகைக்கு அழைப்புவிடும் 'அதான்' சொல்பவராகத் தேர்ந்தெடுத்தார். இவர் "பிலால் இப்னு ரியா", "இப்னு ராபா", "பிலால்-அல்-ஹபாஷி" அல்லது "எத்தியோப்பியாவின் பிலால்" எனவும் அழைக்கப்பட்டார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.