அபூபக்கர்

அபூபக்கர் (ரலி) (Abu Bakr (Abdullah ibn Abi Quhafa) அல்லது Abū Bakr as-Șiddīq, அரபு: أبو بكر الصديق) அபூபக்கர்(ரலி)என்ற புனைப்பெயரால் பொதுவாக அறியப்படுகிறார்[1]. முதன் முதலாக இஸ்லாம் சமயத்தை தழுவியவர்களில் ஒருவராவார். மிகச்சிறந்த ஒழுக்கசீலரான இவர் முகம்மது நபியவர்களின் மரணத்தின் பின்னர் முதல் கலிபாவாக பதவி வகித்தார்[2].[3]. இவர் காலத்தில் இஸ்லாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டி பரவியது.

அபூபக்கர்(ரலி)
Khalifat-ul-Rasūl
(நபிக்குப் பின் ஆட்சிசெய்தவர்)
கலிஃபா அபூபக்கர்(ரலி) பேரரசின் உச்ச ஆண்டு, 634.
காலம்8 சூன் 632–23 ஆகஸ்டு 634
பட்டங்கள்
  • சித்திக் الصدِّيق
  • Companion of the Cave
  • Companion of the Tomb
  • சேக் அக்பர்
  • அத்திக்
பிறப்புc. 573
பிறந்த இடம்மக்கா, அரேபியா
(தற்போது: சவுதி அரேபியா)
இறப்பு23 ஆகஸ்டு 634
இறந்த இடம்மதினா, அரேபியா
(தற்போது: சவுதி அரேபியா)
அடக்கத்தலம்நபியின் பள்ளி, மதினா
முன் ஆட்சிசெய்தவர்முகம்மது(சல்)
பின் ஆட்சிசெய்தவர்உமர்(ரலி)
Consort to1.அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா
2.ஆமிருடைய மகள் உம்மு ரூமான்
3.உமைஸுடைய‌ மகள் அஸ்மா
4.ஹாரீஜாவுடைய மகள் ஹபீபா
Children1.அப்துல்லாஹ்

2.அப்துர்ரஹ்மான் 3.முஹம்மத் 4.ஆயிஷா 5.அஸ்மா

6.உம்மு குல்சூம்

இளமை

அபூகுஹாஃபா என்ற உஸ்மானுக்கும் சல்மா என்ற உம்முல் கைர் என்பவருக்கும் மகனாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அபூபக்கர் என்பது அவர்களின் புனைப் பெயராகும். இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல்லாஹ். அல்இஸாபா பாகம் : 2 பக்கம் : 1088

நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லிய போது வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு நபி (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால் சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற புனைப் பெயரும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மனைவியர்

அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். அவர்கள்:

1.அப்துல் உஸ்ஸாவின் மகள் கதீலா
2.ஆமிருடைய மகள் உம்மு ரூமான்
3.உமைஸுடைய‌ மகள் அஸ்மா
4.ஹாரீஜாவுடைய மகள் ஹபீபா

இவர்களில் கதீலாவைத் தவிர்த்து ஏனைய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். கதீலா இஸ்லாத்தை ஏற்றாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

குழந்தைகள்

இந்நால்வரின் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் மொத்தம் ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அபூபக்கர் (ரலி), அப்துர் ரஹ்மான்(ரலி), முஹம்மத், ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி), அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி), உம்மு குல்சூம் பின்த் அபூபக்கர் (ரலி) ஆகியோராவர். இவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

சந்தித்த போர்கள்

முகம்மது நபியின் காலத்தில் இவர் உஹத் போர், அகழ்ப்போர், பனூ குரைஜா போர், கைபர் போர், ஹூனைன் போர், தாயிப் முற்றுகை, மக்கா வெற்றி போன்ற போர்களில் போரிட்டதோடு அதற்காக தமது செல்வத்தையும் வாரி வழங்கினார். இவர் காலத்தில் இசுலாமிய சமயம் அரேபியநாட்டையும் தாண்டிப் பரவியது.

ஆட்சிக்காலம்

இவர் கிபி 632 முதல் கிபி 634 வரை இரண்டு ஆண்டு காலம் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசு முறியடிக்கப்பட்டது. அரசியல் மற்றும் நிர்வாகங்கள் சீரமைக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே தோன்றிய பொய்தூதர்களும் முறியடிக்கப்பட்டனர்.

மேலும் முகம்மது நபியின் ஹதீஸ்கள் தொகுக்கும் பணியும் இவரது ஆட்சிக்காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. கிபி 634-ம் ஆண்டு மரணமடைந்த இவர், தனக்குப்பிறகு உமரை அடுத்த கலிபாவாக நியமித்தார்.

மேற்கோள்கள்

  1. , from islam4theworld
  2. Ahmad, Abdul Basit, 2001, "Abu Bakr Siddiq : The First Caliph of Islam , DS Publications ISBN 9960-86114-7
  3. , from Encyclopædia Britannica
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.