அகழ்ப்போர்

அகழ்ப்போர் (Battle of Trench, அல்லது Battle of the Confederates) என்பது கிபி 627 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 4) மதீனா நகர முஸ்லிம்கள் மீது அன்றைய யூதர்கள் உள்பட அனைத்து அரபுக் குலத்தாரும் ஒன்று திரண்டு வந்து தொடுத்த போர். அப்போது நகருக்குள் எதிரிகளை நுழைய விடாமல் தடுப்பதற்காக மதீனாவைச் சுற்றிலும் அகழ் ஒன்று தோண்டப்பட்டது. இதனாலேயே அது அகழ்ப்போர் என வழங்கப்படலாயிற்று. யூதர்களுடன் கைகோர்த்துக்கொண்டு அனைத்து அரபுக் குலத்தாரும் அணிதிரண்டு வந்ததால் அல்-அஹ்சாப் (கூட்டுப்படை) போர் என்றும் வழங்கப்படுகிறது.

அகழ்ப் போர்
இசுவாமிய-குராசி குலப் போர்கள் பகுதி
நாள் மார்ச்சு 31 - ஏப்ரல் கி.பி. 627[1][2]
இடம் மதீனாவைச் சுற்றி
முற்றுகை தோல்வி; இசுலாமிய வெற்றி
பிரிவினர்
இசுலாமியர் *மக்காவின் குராசி குலம்
  • யூத/அரபு குலத்தினர்
  • பல பாகால் வழிபாட்டு அரபு குலத்தினர்
தளபதிகள், தலைவர்கள்
முகம்மது நபி அபு சுபியான் இபின் ஹாப்
பலம்
3,000[3] 10,000[3]
இழப்புகள்
குறைவு[4] மிக அதிகம்[4]

கூட்டுப்படையில் ஏறத்தாழ 10,000 ஆண்கள் பங்குபற்றினர். இவர்களுடன் 600 குதிரைகள், சில ஒட்டகங்கள் பங்குபற்றின. இவர்களை எதிர்த்து 3,000 மதீனாக்கள் பங்குபற்றினர். கிபி 627 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் போர் ஆரம்பமானது.

மேற்கோள்கள்

  1. Watt, Muhammad at Medina, p. 36f.
  2. Rodinson, Muhammad: Prophet of Islam, p. 208.
  3. Watt, Muhammad: Prophet and Statesman, pp. 167–174.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.