பிரீடரிக் ஷெல்லிங்

பிரீடரிக் வில்ஹெல்ம் யோசெப் ஷெல்லிங் (Friedrich Wilhelm Joseph Schelling) (ஜனவரி 27, 1775ஆகஸ்ட் 20, 1854), பின்னாளில் ஃவான் ஷெல்லிங் (von Schelling) என்று அழைக்கப்பட்ட டாய்ட்ச்(ஜெர்மன்) நாட்டு மெய்யியல்லாளர் ஆவார். இவர் மெய்யியலில் டாய்ட்ச் கருத்தியம் என்று கூறப்படும் கருத்தெழிச்சியில் பங்கு கொண்டு ஆக்கம் அளித்தவர். டாய்ட்ச் கருத்தியம் வரலாற்றில் இவர் தனக்கு அறிவுரை தந்து முன்னோடியாக இருந்த யோஃகான் ஃவிஃக்டெயுக்கும், பின்னர் தன்னுடன் பல்கலைக்கழகத்தில் ஓரறையில் வாழ்ந்த ஹெகலுக்கும் இடைப்பட்டவராக கருதப்படுகின்றார். ஷெல்லிங்கின் மெய்யியலும் புரிந்துகொள்ளக் கடுமையானது என்று பெயர் பெற்றது.

மேற்குலக மெய்யியல்
18 ஆவது நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்
பிரீடரிக் ஷெல்லிங்

பெயர்

பிரீடரிக் வில்ஹெல்ம் யோசெப் ஷெல்லிங்

பிறப்பு

ஜனவரி 27, 1775, லியோன்பெர்க், ஜெர்மனி

இறப்பு

ஆகஸ்ட் 20, 1854, பாடு டகாட்ஸ், சுவிசர்லாந்து

கருத்துப் பரம்பரை

டாய்ட்ச் கருத்தியம்

முதன்மைக் கருத்துக்கள்

இயற்கை மெய்யியல், இயற்கை அறிவியல், கலையழகியல், சமயம், மீவியற்பியல், Epistemology

ஏற்ற தாக்கங்கள்

பிளாட்டோ, யாக்கோப் போமெ, ஸ்பினோசா, லீப்னிட்ஸ், இம்மானுவேல் கண்ட், ஜக்கோபி, ஹெர்டர், கோத்தே, ஹோல்டர்லின்Hölderlin, யோஃகான் ஃவிஃக்டெ

ஊட்டிய
தாக்கங்கள்

ஹெகல், சாமுவேல் கோலரிட்ஜ், கீர்க்கெகார்டு, ஹைடிகர், பால் டில்லிச், சார்லஸ் பையர்சு, கோத்தே

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.