பிரிஸ்டல்

பிரிஸ்டல் (Bristol, i/ˈbrɪstəl/) இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஒற்றை ஆட்புலப் பகுதியாகவும் நிர்வாக மாவட்டமாகவும் விளங்குகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை 2009ஆம் ஆண்டு நிலவரப்படி 433,100ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் அடக்கிய பெரிய ஊரக வலயத்தில் (LUZ) 2007ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி மக்கள்தொகை 1,070,000 ஆகும்.[3] மக்கட்தொகையில் இந்நகரம் இங்கிலாந்தில் ஆறாவது இடத்திலும் ஐக்கிய இராச்சியத்தில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது, தெற்கு இங்கிலாந்தில் மக்கட்தொகையில் இலண்டனுக்கு அடுத்த பெரிய நகர் இதுவேயாகும். இங்கிலாந்தின் முக்கிய நகர்களின் குழு (Core Cities Group) என்கின்ற இலண்டனை தவிர்ந்த எட்டு பாரிய பிராந்திய நகர்களின் அமைப்பின் உறுப்பு நகராகவுள்ளது. இந்நகரம் இங்கிலாந்தின் நான்காவது நகராக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன் உலகமயமாதல் மற்றும் உலக நகரங்களின் ஆய்வு இணையத்தாள் (Globalization and World Cities Research Network) கமா+ (gamma+) உலக நகர்களில் ஒன்றாக தரப்படுத்தியுள்ளது[4].

பிரிஸ்டல்
ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி
பிரிஸ்டல் நகரக் காட்சிகள்

நகர மன்றத்தின் மரபுவழி மேலங்கிச் சின்னம்
குறிக்கோளுரை: "Virtute et Industria"
"பண்பாலும் உழைப்பாலும்"

இங்கிலாந்தில் பிரிஸ்டலின் அமைவிடம்
இறையாண்மை நாடுஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடுஇங்கிலாந்து
மண்டலம்தென் மேற்கு இங்கிலாந்து
நிர்வாக கௌன்ட்டிபிரிஸ்டல்
(தனியான கௌன்ட்டி)
நிர்வாகத் தலைமையிடம்பிரிஸ்டல்
அரச கட்டளை1155
கௌன்ட்டி தகுதி1373
அரசு
  வகைஒற்றை ஆட்புலம், கதீட்ரல் உள்ள நகரம்
  ஆட்சி அமைப்புபிரிஸ்டல் நகர மன்றம்
  தலைமைமேயரும் ஆய அவையும்
  மேயர்ஜார்ஜ் பெர்குசன்
பரப்பளவு
  ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி[
ஏற்றம்[1]11
மக்கள்தொகை (2011)
  ஒற்றை ஆட்புலம்,கதீட்ரல் உள்ள நகரம், நிர்வாக கௌன்ட்டி4,28,100
  அடர்த்தி3,639
  நகர்ப்புறம்587
  பெருநகர்1
நேர வலயம்கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒசநே0)
இணையதளம்bristol.gov.uk/

இந்நகரில் பிறந்து வளர்ந்த மக்களை பிரிஸ்டோலியன்ஸ் (Bristolians) என்பர்.[5] நகரின் எல்லையாக சொமேர்செட் மற்றும் குளொஸ்டர்சயர் மாவட்டங்களை கொண்டுள்ளதுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத் மற்றும் குளொஸ்டர் நகரங்கள் இதற்கு முறையே தென்கிழக்கிலும் வடமேற்கிலும் உள்ளன. இந்நகரின் குறுகிய கரையோரப்பகுதி செவெர்ன் நதி முகத்துவாரத்துடன் உள்ளது.

இந்த நகர் அரச அங்கீகாரத்தை 1155இல் பெற்றது, 1373இல் தனியான மாவட்ட தகுதியை பெறும்வரை குளொஸ்டசயரின் ஒரு பகுதியாக இருந்தது. 13வது நூற்றாண்டில் இருந்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வரி வருமானத்தில் முதல் மூன்று நகர்களில் ஒன்றாக (யார்க் மற்றும் நொரிச் நகர்களுடன்) இருந்தது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் லிவர்ப்பூல், பர்மிங்காம், மான்செஸ்டர் போன்ற நகரங்களின் விரைவான வளர்ச்சியால் 18வது நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலையை இழந்தது.

இந்த நகரம் ஏவான் ஆற்றையொட்டி அமைந்துள்ளது. இதன் பெயர் தொன்மை ஆங்கிலத்தில் பாலம் உள்ளவிடம் எனப் பொருள்படும். இது 800 ஆண்டுகளாக துறைமுகமாக இருந்து வந்தது. தற்போது உள்ள பெரிய கப்பல்கள் இத்துறைமுகத்தை அணுகுவது கடினமாக உள்ளது. ஏவான்மௌத் எனப்படும் ஏவான் ஆற்று கழிமுகத்தில் புதிய துறைமுகம் கட்டமைக்கபட்டுள்ளது.

மிகவும் பழைமையான இந்த நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயங்களும் கட்டிடங்களும் உள்ளன. கிளிஃப்டன் தொங்கு பாலம் ஆற்றை மிக உயர்ந்த இடத்தில் கடக்கிறது. கிளிஃப்டனில்தான் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் உள்ளது.

பிரிஸ்டல் அடிமை வணிகத்திற்கு மையமாக இருந்தது.[6] இரண்டாம் உலகப் போரின் போது இந்த நகரம் வெகுவாக சேதமடைந்தது. தற்போது இங்கு பல புதிய தொழிற்சாலைகளும் அலுவலகக் கட்டிடங்களும் எழுப்பப்பட்டுள்ளன. கான்கோர்டு சூப்பர்சோனிக் வானூர்தி இங்குதான் உருவாக்கப்பட்டது. டிரிப் ஹாப் எனப்படும் வகையான இசைவகை இங்குதான் உருவானது.[7]

பிரிஸ்டல் ஐக்கிய இராச்சியத்தின் பிரபல சுற்றுலா இடங்களில் ஒன்று, 2009ஆம் ஆண்டு உலகின் முதல் 10 சிறந்த நகர்களில் ஒன்றாக சர்வதேச பயண பதிப்பகமன டோரலிங் கிண்டேர்ச்லி (Dorling Kindersley) தனது இளையாவர்களுக்கான ஐவிட்னாஸ் (Eyewitness) கய்டில் தெரிவுசெய்தது. பிரித்தானியாவில் வாழ்வதற்கு சிறந்த நகர் பிரிஸ்டல் என சண்டே டைம்ஸ் செய்தித்தாள் 2014இல் பெயரிட்டது, 2015ஆம் ஆண்டில் இதன் சுற்றுச்சூழல் தரத்துக்காகவும் அதன் முன்னேற்றத்திற்கான பங்களிப்பிற்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்தாள் ஐரோப்பாவின் பச்சை தலைநகர் என்ற தலைப்பு வழங்கப்பட்டது[8].

உலகில் 34 இடங்கள் இந்நகரின் நினைவையொட்டி பிரிஸ்டல் எனப் பெயரிடப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

  1. "Historical Weather for Bristol, England, United Kingdom". Weatherbase. Canty & Associates (June 2011). பார்த்த நாள் 3 August 2007.
  2. "Population estimates for UK, England and Wales, Scotland and Northern Ireland – current datasets" (ZIP). National Statistics Online. Office for National Statistics. மூல முகவரியிலிருந்து 29 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 27 June 2010.
  3. "Population and living conditions in Urban Audit cities, larger urban zone (LUZ) (tgs00080)". Eurostat. European Commission. பார்த்த நாள் 18 June 2011.
  4. "The World According to GaWC 2012". Globalization and World Cities Research Network. பார்த்த நாள் 25 March 2014.
  5. "Famous Bristolians". Mintinit.com. பார்த்த நாள் 12 November 2011.
  6. "Colston's slave trade legacy". thisisbristol.co.uk. பார்த்த நாள் 18 December 2010.
  7. Maine, Samatha. "Trip-Hop in Bristol – a brief history - 1994 rises". http://www.purplerevolver.com/music/reviews/122149-%E2%80%9994-trip-hop-in-bristol-%E2%80%93-a-brief-history.html. பார்த்த நாள்: 23 Sept 2012.
  8. European Green Capital, European Commision

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.