பிரசெல்சு வானூர்தி நிலையம்

பிரசெல்சு வானூர்தி நிலையம் (Brussels Airport, (ஐஏடிஏ: BRU, ஐசிஏஓ: EBBR), இது பிரசெல்சு-நேசனல் / பிரக்செல்சு-நேசனல் , பிரசெல்-சாவெந்தெம் எனவும் அழைக்கப்படுகின்றது) பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சு நகரின் வடகிழக்கே 6 NM (11 km; 6.9 mi) தொலைவில்[3] அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 2015இல் 23 மில்லியனுக்கும் மேலான பயணிகள் வந்தும் புறப்பட்டும் சென்றுள்ளனர். இது ஐரோப்பாவின் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையங்களில் 21ஆவது இடத்தில் உள்ளது. இது மாகெலென் புறநகர்ப் பகுதியில் பகுதி டையஜெம் பகுதியிலும் பகுதி சாவெந்தெம் பகுதியிலும் அமைந்துள்ளது.[4] மேலும் ஓர்பகுதி பிளெமிஷ் வட்டாரத்தின் இசுடீனோக்கெர்சீல் பகுதியில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 260 நிறுவனங்கள் அமைந்துள்ளன; இவற்றில் நேரடியாக 20,000 மக்கள் பணி புரிகின்றனர். பிரசெல்சு எயர்லைன்சு, ஜெட்ஏர்பிளை, தாமசுகுக் எயர்லைன்சு போன்ற வான்வழிக் கோக்குவரத்து நிறுவனங்களின் அச்சு மையமாக விளங்குகின்றது.

பிரசெல்சு வானூர்தி நிலையம்
Luchthaven Brussel-Nationaal (டச்சு)
Aéroport de Bruxelles-National (பிரெஞ்சு)
ஐஏடிஏ: BRUஐசிஏஓ: EBBR
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது & படைத்துறை
இயக்குனர் பிரசெல்சு வானூர்திநிலைய நிறுவனம்
சேவை புரிவது பிரசெல்சு, பெல்ஜியம்
அமைவிடம் சாவெந்தெம், மாசெலென் மற்றும் இசுடீனோக்கெர்சீல்
மையம்
  • அபெலாக் ஏவியேசன்
  • பிரசெல்சு எயர்லைன்சு
  • ஜெட்ஏர்பிளை
  • சவுதியா கார்கோ
  • சிங்கப்பூர் எயர்லைன்சு கார்கோ
  • தாமசு குக் எயர்லைன்சு
உயரம் AMSL 184 ft / 56 m
ஆள்கூறுகள் 50°54′05″N 004°29′04″E
இணையத்தளம் www.brusselsairport.be
நிலப்படம்(கள்)
வானூர்திநிலைய விளக்கப்படம்
வானூர்திநிலைய விளக்கப்படம்
BRU
பெல்ஜியத்தில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
01/19[1] 2 9,800 அசுபால்ட்டு
07R/25L 3 10 அசுபால்ட்டு
07L/25R 3 11 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2015)
பயணிகள் 23
சரக்கு (டன்கள்) 489
வானூர்தி போக்குவரத்து 239
மூலங்கள்: பிரசெல்சு வானூர்தி நிலையம்,[2] வான்வழிப் போக்குவரத்து தகவல் வெளியீடு[3]

இந்நிலையத்தை இயக்கும் நிறுவனத்தின் பெயர் "பிரசெல்சு வானூர்திநிலைய நிறுவனம் என்.வி./எஸ்.ஏ." ஆகும்.அக்டோபர் 19, 2006க்கு முன்பாக இது பிரசெல்சு பன்னாட்டு வானூர்தி நிலைய நிறுவனம் என அழைக்கப்பட்டு வந்தது. 2011 முதல் இந்நிலையத்தின் உரிமையை ரொறன்ரோவின் ஒன்ராறியோ ஆசிரியர்கள் ஓய்வூதியத் திட்டம் (39%), மாக்குயரீ ஐரோப்பிய கட்டமைப்பு நிதியம் I மற்றும் மாக்குயரீ ஐரோப்பிய கட்டமைப்பு நிதியம் III (36%), பெல்ஜிய அரசு (25%) பெற்றுள்ளன.[5]

முனையங்கள்

இந்த வானூர்தி நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. ஒன்று செங்கன் பரப்பிலுள்ள பறப்புகளுக்கும் மற்றொன்று செங்கன் பரப்பிற்கு வெளியிலான பறப்புக்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

நிகழ்வுகளும் விபத்துகளும்

மேற்சான்றுகள்

  1. "Brussels Airport Website: Runway 02/20 gets a new name: 01/19". பார்த்த நாள் 2 June 2015.
  2. "Brussels Airport Website: Brussels Airport ends 2015 with new passenger record and 7% growth".
  3. "EBBR – Brussels / Brussels-National" (PDF). AIP Belgium and G.D. of Luxembourg. Steenokkerzeel: Belgocontrol AIM (26 July 2012). பார்த்த நாள் 4 August 2012.
  4. "bedrijf.jpg." Retrieved on 25 April 2010.
  5. "Moody's assigns (P)Baa1 rating to Brussels Airport Holding SA/NV's senior secured debt; stable outlook". Moodys.com. பார்த்த நாள் 2 June 2015.
  6. Matthew Weaver (22 March 2016). "Brussels Airport explosions – live updates". The Guardian. http://www.theguardian.com/world/live/2016/mar/22/brussels-airport-explosions-live-updates. பார்த்த நாள்: 22 March 2016.
  7. "17 dead, dozens wounded in 2 blasts at Brussels airport – reports". RT International.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.