பிரகலாதா
பிரகலாதா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது.
பிரஹ்லாதா | |
---|---|
![]() பிரஹ்லாதா திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | பி. என் ராவ் |
தயாரிப்பு | சேலம் சங்கர் |
கதை | டி. சி. வடிவேலு நாயக்கர் |
இசை | ஷர்மா சகோதரர்கள் |
நடிப்பு | டி. ஆர். மஹாலிங்கம், எம். ஆர். சந்தானலட்சுமி, ஆர். பாலசுப்ரமணியம், எம். ஜி. ஆர், என். எஸ். கே. டி.ஏ. மதுரம் |
விநியோகம் | சேலம் சங்கர் பிலிம்ஸ் |
வெளியீடு | 12 டிசம்பர் 1939 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விஷ்ணு புராணத்தில் வரும் நரசிம்மன், பிரகலாதனின் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இதில், எம். ஜி. ஆர் இந்திர கடவுள் வேடத்தில் நடித்திருந்தார்.[1] இது எம். ஜி. ஆரின் ஆறாவது படமாகும். மேலும் இதில், எம். ஜி. ஆர்க்கும் சந்தானலக்ஷிமிக்கும் இடையே ஒரு கத்தி சண்டை காட்சி இடம்பெற்றிருந்தது.[2]
நடிகர்கள்
- தெ. இரா. மகாலிங்கம் - பிரகலாதா
- எம். ஆர். சந்தானலக்ஷ்மி - கையது
- ஆர். பாலசுப்ரமணியம் - இரண்யகசிப்பு
- நகர்க்கோயில் கே. மஹாதேவன் - நாரதர்
- எம். ஜி. ஆர் - இந்திரன்
- என். எஸ். கிருஷ்ணன்
- டி. ஏ. மதுரம்
- டி. எஸ். துரைராஜ்
- பி. எஸ். ஞானம்
தயாரிப்பு
சேலம் ஷங்கர் பிலிம்ஸ் மற்றும் சென்ட்ரல் ஸ்டுடியோஸ் கோவை ஆகிய இருநிறுவனகளும் இப்படத்தை தயாரித்தன. இந்தத் திரைப்படத்தின் கதை வசனம் மலையாள பாதிப்பை ஒட்டியே எழுதப்பட்டது. இந்தப் படத்தின் மலையாள பாதிப்பிற்கு கதை வசனத்தை என். பி. செல்லப்பன் நாயர் எழுதினார். இப்படம் வணிக ரீதியாக ஒரு சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.[3][4]
மறு-ஆக்கங்கள்
முதலில் தெலுங்கு மொழியில் 'பக்த பிரகலாதா' என்ற பெயரில் 1939 யில் வெளியானது. பின்னர், 1942-யில் அதேபெயருடன் மறுஆக்கம் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, வங்காளம், அசாமிய மொழி, இந்தி மற்றும் பல மொழிகளில் இருபதுக்கும் மேற்பட்ட முறை இப்படம் மறுஆக்கம் செய்யப்பட்டு பெரும்பாலும் வெற்றிப்படமாகவே அமைந்தது குறிப்பிடத்தக்கது.