பிப்ளிஸ்

பிப்ளிஸ் (Byblis) என்பது ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது பிப்ளிடேசியீ என்னும் சிறிய குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இந்த இனத்தில் இரண்டு வகைச் செடிகள் உள்ளன. இச்செடியின் அடியில் மட்டத்தண்டு கிழங்கு உள்ளது. இவை ஆஸ்திரேலியாவின் ஈரமான பகுதியில் நன்கு வளர்கின்றன. இவற்றை வானவில் செடிகள் (Rainbow plant) என்றும் அழைப்பார்கள். இது திரோசிரா செடியைப் போன்றதே ஆனால் இலைகளில் உள்ள உணர்வு முடிகள் மூடிக்கொள்வதில்லை.

பிப்ளிஸ்
பிப்ளிஸ் லினிபோலியா
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: பிப்ளிடேசியீ
Domin (1922)
பேரினம்: பிப்ளிஸ்
Salisb. (1808)
இனம்

See text.

வகைகள்

பிப்ளிஸ் ஜைஜேன்டியா(byblis gigantea)

இச்செடிகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் மணல் நிறைந்த ஈரமான சதுப்பு நிலங்களில் வளர்கின்றன. இது ஒரு சிறிய புதர்ச் செடியாகும். இது 30 முதல் 50 செ. மீ. உயரம் வரை வளர்கிறது. இதன் அடிப்பகுதியில் கட்டை போன்று மட்டத்தண்டு கிழங்கு உள்ளது. இதன் தண்டுப் பகுதியிலிருந்து பல கிளைகளும், அதில் மிக மெல்லிய நூல் போன்ற இலைகள் 10-20 செ. மீ நீளம் வரை உள்ளன. இலை முழுவதும் பசையைச் சுரக்கக் கூடிய சுரப்பிகள் உள்ளன. இதிலிருந்து பிசுபிசுப்பான பாகு போன்ற பசை சுரக்கிறது. இதனால் கவரப்பட்ட பூச்சிகள் இந்தப் பசையில் பிடிக்கப்பட்டு பின்னர் செரிக்கப்படுகிறது. இதில் பெரிய ஊதா- சிவப்புப் பூக்கள் மலர்கின்றன.

பிப்ளிஸ் லினிபோலியா(B.Linifolia)

லினிபோலியா விதைகள்

இது மேற்கு ஆஸ்திரேலியாவில் வளர்கிறது. இது ஒரு நிறிய செடியாகும். இதன் இலைகள் மெல்லியதாகவும், நூல் போன்றும் இருக்கும். 6 முதல் 8 செ. மீ. நீளம் வரை இதன் இலைகள் வளர்கிறது. இதன் சுரப்பிகள் இலை முழுவதும் நெருக்கமாக உள்ளன. அவை தேன் போன்ற பொருளை சுரக்கின்றன. இதன் செடியில் வெண்மை நிறப் பூக்கள் பூக்கின்றன.

ஊனுண்ணித் தாவரங்களின் பகுப்பு அட்டவணை

வரிசைஎண் குடும்பம் பேரினம் வகைகள்
1 பிப்ளிடேசியீ பிப்ளிஸ் 2
ரோரிடுலா 1
2 செப்பலோடேசியீ செபலோட்டசு 1
3 திரோசிரேசியீ ஆல்ட்ரோவாண்டா 1
டயோனியா 1+1
திரோசிரா 90
திரொசோபில்லம் 2
4 லண்டிபுளோரேசியீ பிங்குவிக்குலா 40
ஜென்லிசியா 1
பயோவுலேரியா 1
யூட்ரிக்குளோரியா 275
பாலிபாம்போலிக்ஸ் 2
5 நெப்பந்தேசியீ நெப்பந்திசு 70
6 சாரசீனியேசியீ டார்லிங்டோனியா 1+1
ஹிலியாம்போரா 3
சாரசீனியா 6

உசாத்துணை

ஏற்காடு இளங்கோ எழுதிய அதிசயத் தாவரங்கள். அறிவியல் வெளியீடு. மார்ச்சு-2004

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.