சார்லசு டிகால் வானூர்தி நிலையம்
பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் (Paris Charles de Gaulle Airport, French: Aéroport Paris-Charles de Gaulle, ஐஏடிஏ: CDG, ஐசிஏஓ: LFPG), மேலும் ருவாய்சி வானூர்தி நிலையம் (அல்லது பிரான்சியத்தில் சுருக்கமாக ருவாய்சி) என அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் பிரான்சின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் உலகின் முதன்மை வான்வழி மையங்களில் ஒன்றும் ஆகும். இது ஐந்தாவது பிரெஞ்சு குடியரசின் நிறுவனரும் கட்டற்ற பிரெஞ்சுப் படையின் தலைவருமான சார்லஸ் டி கோல் (1890–1970) நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது பாரிசின் வடகிழக்கே 25 km (16 mi)[2] தொலைவில் அமைந்துள்ளது. ஏர் பிரான்சின் முதன்மை முனைய நடுவமாக சேவையாற்றுகிறது.
பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் Aéroport Paris-Charles-de-Gaulle ருவாய்சி வானூர்தி நிலையம் | |||
---|---|---|---|
![]() | |||
ஐஏடிஏ: CDG – ஐசிஏஓ: LFPG | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொது | ||
உரிமையாளர்/இயக்குனர் | பாரிசின் வானூர்தி நிலையங்கள் நிறுவனம் | ||
சேவை புரிவது | பாரிஸ், பிரான்சு | ||
அமைவிடம் | பாரிசின் வடகிழக்கில் 25 km (16 mi) | ||
மையம் |
| ||
உயரம் AMSL | 392 ft / 119 m | ||
ஆள்கூறுகள் | 49°00′35″N 002°32′52″E | ||
இணையத்தளம் | |||
நிலப்படம் | |||
![]() பிரான்சில் இல் ட பிரான்சு வட்டாரப் பகுதியின் அமைவிடம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
08L/26R | 4 | 13,829 | அசுபால்ட்டு |
08R/26L | 2 | 8 | பைஞ்சுதை |
09L/27R | 2 | 8 | அசுபால்ட்டு |
09R/27L | 4 | 13 | அசுபால்ட்டு |
புள்ளிவிவரங்கள் (2012) | |||
வானூர்தி இயக்கங்கள் | 497 | ||
பயணிகள் | 61 | ||
மூலங்கள்: பிரான்சின் வான்வழித் தரவுகள் வெளியீடு,[2] வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு[3][4] |
2012இல் இந்த நிலையம் 61,556,202 பயணிகளையும் 497,763 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது.[5] உலகின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் ஐரோப்பாவில் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தரவரிசையில் உலகின் பத்தாவதாகவும் ஐரோப்பாவில் முதலாவதாகவும் விளங்குகிறது. 2011இல் சரக்கு போக்குவரத்தில் 2,087,952 மெட்றிக் டன்களை கையாண்ட இந்த நிலையம் உலகளவில் ஐந்தாவதாகவும் ஐரோப்பாவில் பிராங்க்புர்ட் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.[5]
மேற்சான்றுகோள்கள்
- "Delta Air Lines Newsroom – Press Kit". News.delta.com (7 January 2010). பார்த்த நாள் 28 January 2011.
- வார்ப்புரு:AIP FR
- Traffic Movements 2010 Final வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழுவிடமிருந்து
- Passenger Traffic 2010 Final [[வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு]விடமிருந்து]
- "Statistiques annuelles". Union des aéroports Français. பார்த்த நாள் 24 February 2012.
வெளி இணைப்புகள்
- பொது
- Aéroports de Paris (official website) (ஆங்கிலம்)
- Aéroport de Paris Charles de Gaulle (Union des Aéroports Français) (பிரெஞ்சு)
- 2ஈ முனையம் உருக்குலைந்தது குறித்து