பாப் வுல்மர்
ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் (Robert Andrew Woolmer, மே 14, 1948-மார்ச் 18, 2007) முன்னாள் துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் ஆவார். இங்கிலாந்து அணியை சேர்ந்து 19 தேர்வுப் போட்டிகளிலும் ஆறு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்பு தென்னாப்பிரிக்கா, வார்விக்சயர், மற்றும் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார்.
பாப் வுல்மர் Bob Woolmer | |||||||||
![]() | |||||||||
இவரைப் பற்றி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | Robert Andrew Woolmer ராபர்ட் ஆன்ட்ரூ வுல்மர் | ||||||||
பட்டப்பெயர் | வுலி | ||||||||
பிறப்பு | மே 14, 1948 | ||||||||
கான்பூர், இந்தியா | |||||||||
இறப்பு | 18 மார்ச்சு 2007 58) | (அகவை||||||||
கிங்ஸ்டன் பல்கலைக்கழக மருத்துவமனை, ஜமேக்கா | |||||||||
உயரம் | 6 ft 0 in (1.83 m) | ||||||||
வகை | All-rounder | ||||||||
துடுப்பாட்ட நடை | வலது கை | ||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை மத்திமம் | ||||||||
அனைத்துலகத் தரவுகள் | |||||||||
முதற்தேர்வு (cap 463) | 31 ஜூலை, 1975: எ ஆஸ்திரேலியா | ||||||||
கடைசித் தேர்வு | 2 ஜூலை, 1981: எ ஆஸ்திரேலியா | ||||||||
முதல் ஒருநாள் போட்டி (cap 16) | 24 ஆகஸ்ட், 1972: எ ஆஸ்திரேலியா | ||||||||
கடைசி ஒருநாள் போட்டி | 28 ஆகஸ்ட், 1976: எ மேற்கிந்தியத் தீவுகள் | ||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||
1968–1984 | கெண்ட் | ||||||||
1981–1982 | மேற்கு மாகாணம் | ||||||||
1973–1976 | நட்டால் | ||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||
டெஸ்ட் | ஒருநாள் | முது | ஏப | ||||||
ஆட்டங்கள் | 19 | 6 | 350 | 290 | |||||
ஓட்டங்கள் | 1059 | 21 | 15772 | 4078 | |||||
துடுப்பாட்ட சராசரி | 33.09 | 5.25 | 33.55 | 20.39 | |||||
100கள்/50கள் | 3/2 | 0/0 | 34/71 | 1/17 | |||||
அதிக ஓட்டங்கள் | 149 | 9 | 203 | 112* | |||||
பந்து வீச்சுகள் | 546 | 321 | 25823 | 13473 | |||||
இலக்குகள் | 4 | 9 | 420 | 374 | |||||
பந்துவீச்சு சராசரி | 74.75 | 28.88 | 25.87 | 20.64 | |||||
சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 12 | 3 | |||||
ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | த/இ | |||||
சிறந்த பந்துவீச்சு | 1/8 | 3/33 | 7/47 | 6/9 | |||||
பிடிகள்/ஸ்டம்புகள் | 10/– | 3/– | 239/1 | 98/– | |||||
22 ஆகஸ்ட், 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்.com |
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் வுல்மர் பயிற்சியாளராக இருந்த பாகிஸ்தான் அணி அயர்லாந்துக்கு தோல்வி அடைந்து சில மணி நேரங்களுக்கு பிறகு வுல்மர் திடீரென்று உயிரிழந்தார். இதனால் ஜமேக்காவின் காவல்துறை கொலை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு வுல்மர் இயற்கையின் படி உயிரிழந்தார் என்று ஜமேக்கக் காவல்துறை தெரிவித்துள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.