பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

தலைமையிடம் DRDO பவன், புது தில்லி
நிறுவப்பட்ட ஆண்டு 1958
முக்கிய துறை பாதுகாப்பு
ஊழியர்கள் ~30000
அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இணையத் தளம் http://www.drdo.org/
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு

இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது. இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும்.

துணை அமைப்புகள்

டி. ஆர். டி. ஓ தயாரிப்புகள்

சாதனைகள் பற்றிய வீடியோ ː DRDO வின் சொந்த படைப்புகள்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.