பாட்டு பாடவா (திரைப்படம்)

பாட்டுப் பாடவா (Paattu Padava ) என்பது 1995 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் மையத் திரைப்படம் ஆகும். அறிமுக இயக்குநர் பி.ஆர். விசயலட்சுமி இத்திரைப்படத்தை இயக்கினார். இவர் இயக்கிய ஒரே திரைப்படமும் இதுவேயாகும். எசு.பி. பாலசுப்பிரமணியம், ரகுமான், புதுமுகம் லாவண்யா ஆகியோர் இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சனகராச், கல்யாண் குமார், மோகன் நடராசன், சின்னி செயந்து, சிறீவித்யா, சி.ஆர். சரசுவதி, சபிதா ஆனந்து ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.மோகன் ராசு, தன்ராசு ஆகியோர் தயாரித்த இப்படத்திற்கு இளையராசா இசையமைத்தார். 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாட்டுப் பாடவா திரையிடப்பட்டது. வியாபார நோக்கில் ஒரு சராசரியான வருவாயையும் ஈட்டிக் கொடுத்தது [1][2][3][4][5][6][7].

பாட்டு பாடவா
இயக்கம்பி ஆர் விஜயலட்சுமி
தயாரிப்புபி. மோகன்ராஜ்
பி. தன்ராஜ்
கதைபி. ஆர். விஜயலட்சுமி
சிவராம் காந்தி (வசனங்கள்)
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புடி. குணசேகரன்
கலையகம்கிரண் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 10, 1995 (1995-02-10)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

பாட்டு பாடவா
பாடல்கள் by
வெளியீடு1995
ஒலிப்பதிவு1995
இசைப் பாணிபீச்சர் பிலிம் பாடல்கள்
நீளம்37:20
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இத்திரைப்படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் இளையராஜாவால் உருவாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[8][9]

வரிசை எண்பாடல்பாடகர்கள்நேர அளவு
1'சின்னகண்மணிக்குள்ளே வந்த 'எஸ். பி. பாலசுப்பிரமணியம்5:44
2'வழிவிடு வழிவிடு'இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம்5:18
3'பூங்காற்றிலே ஒரு'லேகா, மால்குடி சுபா, சிந்து4:57
4'நில் நில் நில்'இளையராஜா, உமா ரமணன்5:00
5'அட வா வா'எஸ். பி. பாலசுப்பிரமணியம்5:09
6'இனிய கானம்'எஸ். பி. பாலசுப்பிரமணியம்5:51
7'பாடுறா'சித்ரா, மால்குடி சுபா5:21

மேற்கோள்கள்

  1. "Paatu Padava (1995) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2016-10-11.
  2. "Pattu Padava (1995)". gomolo.com. பார்த்த நாள் 2016-10-11.
  3. "Filmography of paatu padava". cinesouth.com. மூல முகவரியிலிருந்து 2005-12-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-10-11.
  4. "Find Tamil movie Paattu Paadava". jointscene.com. மூல முகவரியிலிருந்து 2009-11-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-10-11.
  5. "Tamil Movie News--1995 Review". groups.google.com (1996-01-09). பார்த்த நாள் 2016-10-11.
  6. Malathi Rangarajan (2000-03-27). "The Hindu : Success for the asking". thehindu.com. பார்த்த நாள் 2016-10-11.
  7. Malathi Rangarajan (2002-05-02). "The Hindu : A winning combination". thehindu.com. பார்த்த நாள் 2016-10-11.
  8. "Paattu Paadavaa Songs". play.raaga.com. பார்த்த நாள் 2016-10-11.
  9. "Paattu Paadava Songs". saavn.com. பார்த்த நாள் 2016-10-11.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.