பவளக்காலி

பவளக்காலி அல்லது பவழக்காலி (Common redshank, Tringa totanus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் பறவை. இது கரைப்பறவை வகையைச் சேர்ந்தது. இனப்பெருக்க காலத்தில் இதன் சிறகுத் தொகுதி பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். பிற காலங்களில் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். செங்கால்களைக் கொண்ட இப்பறவையின் அலகுமுனை கறுப்பு நிறத்தில் இருக்கும்.

பவளக்காலி
இனப்பெருக்க கால சிறகுத் தொகுதியுடன் ஒரு பவளக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
துணைவகுப்பு: Neornithes
வரிசை: Charadriiformes
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Tringa
இனம்: T. totanus
இருசொற் பெயரீடு
Tringa totanus
(L, 1758)
வேறு பெயர்கள்

Totanus totanus (லின்னேயஸ், 1758)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.