பவநகர் அரசு
பவநகர் அரசு (Bhavnagar State) பிரித்தானிய இந்தியாவின் மேற்கில் சௌராட்டிர தீபகற்ப பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். 7,669 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டிருந்த பவநகர் அரசின் இறுதி மன்னர் பவநகர் அரசை, இந்தியாவுடன் இணைக்க 15 பிப்ரவரி 1948 அன்று ஒப்புதல் அளித்தார்.[1]
பவநகர் அரசு ભાવનગર રિયાસત | ||||||
சுதேச சமஸ்தானம் of பிரித்தானிய இந்தியா | ||||||
| ||||||
| ||||||
![]() Location of பவநகர் | ||||||
வரலாறு | ||||||
• | நிறுவப்பட்டது | 1723 | ||||
• | 1947 இந்திய விடுதலை | 1948 | ||||
பரப்பு | ||||||
• | 1891 | 7,669 km2 (2,961 sq mi) | ||||
Population | ||||||
• | 1891 | 4,64,671 | ||||
மக்கள்தொகை அடர்த்தி | 60.6 /km2 (156.9 /sq mi) | |||||


வரலாறு
1194இல் நிறுவப்பட்ட பவநகர் அரசின் துவக்கப் பெயர் செஜக்பூர் ஆகும். பின்னர் 1723இல் இராஜபுத்திர கோகில் குல பவசிங்ஜி என்ற மன்னர் பவநகர் என்ற புதிய நகரை நிறுவிய பின்னர், நாட்டின் பெயர் பவநகர் அரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1807 முதல் பவநகர் அரசு ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தான மன்னர் எனும் அளவில் பவநகர் அரசை ஆண்டனர்.[2] பவநகர் மன்னர்களின் அரண்மனையான நீலம் தோட்டத்து அரண்மனை தற்போது பாரம்பரிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள்
கோகில் இராசபுத்திர குலத்தினர் பவநகர் அரசை 1660 முதல் 1947 முடிய ஆண்டனர்.[3]
- 1660 – 1703 தாக்கூர் சாகிப் இரத்தன்ஜி இரண்டாம் அகேராஜி
- 1703 – 1764 தாக்கூர் சாகிப் பவசிங்ஜி முதலாம் இரத்தன்ஜி
- 1764 – 1772 தாக்கூர் சாகிப் அகேராஜி மூன்றாம் சிம்மஜி
- 1772 – 1816 தாக்கூர் சாகிப் வாகத்சிம்மஜி அகேராஜி
- 1816 – 1852 தாக்கூர் சாகிப் வஜேசிம்மஜி
- 1852 – 1854 தாக்கூர் சாகிப் அகேராஜி நான்காம் பவசிம்மஜி
- 1854 – 11 ஏப்ரல் 1870 தாக்கூர் சாகிப் ஜஸ்வந்த்சிம்மஜி பவ்சிம்மஜி
- 11 ஏப்ரல் 1870 – 29 சனவரி 1896 தாக்கூர் சாகிப் ஜஸ்வந்த்சிம்மஜி
- 29 சனவரி 1896 – 16 சூலை 1919 இரண்டாம் பவசிங்ஜி
- 16 சூலை 1919 – 15 ஆகஸ்டு 1947 கிருஷ்ணகுமார் சிங்ஜி