பர்பத் மாவட்டம்

பர்பத் மாவட்டம் (Parbat District) (நேபாளி: पर्वत जिल्ला கேட்க ), தெற்காசியாவில் நேபாள நாட்டின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின் மாநில எண் 4-இல் அமைந்துள்ள பதினோறு மலைப்பாங்கான மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் குஷ்மா ஆகும்.

நேபாளத்தில் பர்பத் மாவட்டத்தின் அமைவிடம்

தவலாகிரி மண்டலத்தில் இம்மாவட்டம், 494 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,57,826 ஆகும். நேபாளத்தின் சிறிய மாவட்டங்களின் வரிசையில் இம்மாவட்டம் நான்காம் இடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் நாற்பத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களும், குஷ்மா எனும் நகராட்சியும் உள்ளது.

குஷ்மா நகராட்சியில் உள்ள குப்தேஷ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியின் போது திரளான பக்தர்கள் கூடுவர். மேலும் இங்குள்ள பத்தேஷ்வரி அம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இம்மாவட்டத்தில் பத்து மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இமயமலையில் அமைந்த இம்மாவட்டம், கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 4,000 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, என நான்கு நிலைகளில் காணப்படுகிறது. [1]

கிராம வளர்ச்சி மன்றங்கள்

பர்பத் மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

இம்மாவட்டம் ஒரு நகராட்சி மன்றத்தையும், நாற்பத்தி ஏழு கிராம வளர்ச்சி மன்றங்களும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system, Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:87-7903-210-9, http://curis.ku.dk/ws/files/20497354/de2_001.pdf, பார்த்த நாள்: Nov 22, 2013

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.