பரமார்த்த குருவின் கதை

பரமார்த்த குருவின் கதை என்னும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.

1728-இல் புதுவையில் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.

இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைப் பெரிதும் கவர்ந்ததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னக மொழிகள் பலவற்றிலும் இது வெளிவந்தது.

நூலின் முக்கியத்துவம்

இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். ஆசிரியரின் காலமான 18 ஆம் நூற்றாண்டில், உரைநடையாக்கம் என்பது அரிதாகவே பின்பற்றப்பட்டது. அனைத்து தமிழ் வெளிப்பாடுகளும், பெரும்பாலும் கவிதை நடையிலேயே இருந்தன. பாமரரும் பிறரும் தமிழைக் கற்க, இவரது ஆக்கங்கள் இருந்தன என்பதற்கு இக்கதையே சான்றாகும்.

கதைக் களம்

அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள். இவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களையே இந்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது.

சில வரிகள்

பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து எழுதிய கவிதை :

"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிழுக்க
பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதம் வழி"

மேலும் காண்க

இதர இணைய இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.