பரதேசி யூத தொழுகைக் கூடம்

பரதேசி யூத தொழுகைக் கூடம் (Paradesi Synagogue) என்பது கொச்சியில் அமைந்துள்ள, நாடுகளின் பொதுநலவாயத்தில் உள்ள[1] செயற்பாட்டிலுள்ள மிகவும் பழமையான[2] யூத தொழுகைக் கூடம் ஆகும். 1567 இல் கட்டப்ப இது கொச்சி இராச்சியத்தில் "கொச்சி யூத" சமுகத்தினால் கட்டப்பட்ட ஏழு தொழுகைக் கூடங்களில் ஒன்றாகும்.

பரதேசி யூத தொழுகைக் கூடம்
Interior of the synagogue facing the ark
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கொச்சி, கேரளம்
புவியியல் ஆள்கூறுகள்9°57′26″N 76°15′34″E
சமயம்மரபுவழி யூதம்
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகையூத தொழுகைக் கூடம்
நிறைவுற்ற ஆண்டு1568

இந்திய மொழிகளின் பயன்பாட்டில் பரதேசி என்பது வெளிநாட்டவரைக் குறிக்கும் என்பதால் அத்தொழுகைக் கூடத்திற்கும் அப்பெயர் அமைந்தது. அது கொச்சி யூத தொழுகைக் கூடம் எனவும் அழைக்கப்படும்.

உசாத்துணை

  1. The Paradesi Synagogue, Cochin, India. Database of Jewish Communities, Museum of the Jewish People. Accessed online 13 February 2007.
  2. Fernandes, Edna. The Last Jews of Kerala. இலண்டன், ஐக்கிய இராச்சியம்: Portobello Books. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84627-098-7.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.