பம்பை ஆறு
பம்பை ஆறு ( பம்பா ஆறு), தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஐயப்பனுக்கு உரித்தான புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப்பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.
பம்பையாறு | |
---|---|
மூலம் | புளிச்சமலை |
வாய் | வேம்பநாட்டு ஏரி |
நீரேந்துப் பகுதி நாடுகள் | இந்தியா |
நீளம் | 176 கி.மீ (110 மைல்) |
தொடக்க உயரம் | 1,650 மீ |
வெளியேற்றம் | 109 m³/s |
நீரேந்துப் பகுதி | 2,235 km² (873 mi²) |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.