பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி

பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி (International Phonetic Alphebet) உலகில் பேசப்படும் மொழிகளின் பலுக்கல்களை (ஒலிப்புகளை) ஒரு சீர் முறையின் கீழ் எழுதுவதற்காக இலத்தீன் அரிச்சுவடியை மையமாகக் கொண்டு பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் ஆக்கப்பட்ட முறைமை ஆகும்.[1] பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி அந்நிய மொழி கற்கும் மாணவர்கள், அதை கற்பிக்கும் ஆசிரியர்கள், மொழியியலாளர்கள், பேச்சுப் பயிற்சி அளிப்பவர்கள், பாடகர்கள், நடிகர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், அகரமுதலி ஆக்கர்கள் போன்றோரால் பயன்படுத்தப்படுகிறது.[2][3]

பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி
வகை Partially featural alphabet
மொழிகள் Used for phonetic and phonemic transcription of any language
காலக்கட்டம் 1888 to the present
மூல முறைகள் Romic alphabet
  Phonotypic alphabet
   பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி
பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி- 2015.(The International Phonetic Alphabet (revised to 2015))

பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி, பேசும் போது சொல் ஒலிப்பில் தோன்றும் ஏற்ற இறக்கம், நிறுத்தலிடங்கள் போன்ற மாற்றங்களை காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.[1] பேசும் போது இருக்கவேண்டிய பற்களின் நிலை, நாவின் நிலை போன்றவற்றைக் குறிக்க பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி நீட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.[2]

2007 ஆண்டின் படி 107 எழுத்துக்களும் 56 குறியீடுகளும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியில் காணப்படுகின்றன. எழுத்துக்களின் இணைப்போ அல்லது நீக்கமோ பன்னாட்டு ஒலிப்பியல் குழுமத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. International Phonetic Association (IPA), Handbook.
  2. MacMahon, Michael K. C. (1996). "Phonetic Notation". in P. T. Daniels and W. Bright (eds.). The World's Writing Systems. New York: Oxford University Press. பக். 821–846. ISBN 0-19-507993-0.
  3. Wall, Joan (1989). International Phonetic Alphabet for Singers: A Manual for English and Foreign Language Diction. Pst. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1877761508. http://www.amazon.com/International-Phonetic-Alphabet-Singers-Language/dp/1877761508.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.