பன்னம்பாறை
பன்னம்பாறை (Pannamparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். சாத்தான்குளத்திலிருந்து 4கி.மீ. தொலைவில் திருச்செந்தூர் செல்லும் வழியில் இவ்வூர் அமைந்துள்ளது.
பன்னம்பாறை நில அமைப்பு
- இயற்கையோடு இயைந்த குறிஞ்சி நிலத்தின் பாறை மற்றும் விவசாயத்திற்கான மருத நிலத்தின் தன்மையைக் கொண்டுள்ளது இவ்வூர்.
- அழகிய நீரோடைகள் மற்றும் குளங்களைக் கொண்டுள்ளது.
இவ்வூரின் வடக்கில் காணப்படும் பழுப்பேறிய அடுக்குப்பாறைகள், சரளைக்கற்கள்,சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பெருமழைக்காலத்தில் தோன்றியதாகும். மணல் என்பது உடைந்த பாறைத் துண்டுகளையும், இயற்கைக் கனிமங்களையும் கொண்டிருக்கும். செம்மண்பாறை,சுண்ணாம்புப்பாறை,அடுத்து லேசானபாறை காணப்பட்டால் அவ்விடத்தில் நீர்வளம் மிகுந்திருக்கும் என்பது தமிழனின் அறிவியல் கண்டுபிடிப்பு ஆகும். முற்காலத்தில் கடுமையான பாறைப்பகுதியில் குடியேற்றங்கள் அவ்விதத்திலே நிகழ்ந்துள்ளன.
பனம்பாரனார்
தொல்காப்பிய நூலுக்குப் பாயிரம் தந்த புலவர் பனம்பாரனார் ஆவார். பனம்பாரம் என்னும் ஊரின் இருப்பிடம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவிவருகின்றன. இருப்பினும் இவர் தற்போதைய பன்னம்பாறை என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்ற கருத்து ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.[1] [2]
மேற்கோள்கள்
- "பாரத்துத் தலைவன் ஆர நன்னன்" என்னும் குறிப்பு இந்த ஊகத்தை வலுவூட்டச் செய்கிறது.
- இது சொல் ஒலிக்குறிப்பு நோக்கிய ஒரு கருத்து