பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பற்றியும் அதில் முதல் மூன்று மதிப்பெண் பெறுபவர்கள், தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி விகிதம் போன்றவற்றை பற்றிய கட்டுரை.
2012
சமச்சீர்க் கல்வி திட்டத்தின் கீழ் முதன் முதலில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் சூன் 4, 2012ல் வெளியாயின. அதில் மாநில அளவில் தஞ்சை மாணவர் பி. ஸ்ரீநாத் முதலிடம் பிடித்தார். இவர் 500க்கு 497 மதிப்பெண் பெற்று இதுவரை யாரும் பெறாத வகையில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் நான்கு பாடங்களில் சதமடித்தார்.[1]. இத்தேர்வில் சென்னையைச் சேர்ந்த அஞ்சலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகிய மாணவியர் 500-க்கு 497 மதிப்பெண் பெற்றனர். ஆனால் அவர்கள் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் மாநில தரவரிசையில் இடம்பெறவில்லை. முன்னதாக இத்தேர்விற்கு பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 50 ஆயிரத்து 922 மாணவர்கள் தேர்வெழுதியதில் 9 லட்சத்து 5 ஆயிரத்து 538 பேர் தேர்ச்சியடைந்தனர்.[2]