பதான் மாவட்டம்

பதான் மாவட்டம் (Patan district) (குஜராத்தி: પાટણ જિલ્લો) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் பதான் நகரம் ஆகும். மாவட்டப் பரப்பளவு 5740 சதுர கிலோ மீட்டர் ஆகும்.பதான் நகரத்தில் உள்ள ராணியின் குளம் புகழ் பெற்றது. மாவட்டத்தில் இந்து, சமணர்களின் கோயில் அதிகம் உள்ளது.

வடக்கு குஜராத்தின் மாவட்டங்கள்
புதிய மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் வரைபடம்

அமைவிடம்

வடக்கிலும், வடகிழக்கிலும் பனஸ்கந்தா மாவட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் மகிசனா மாவட்டம், தெற்கில் சுரேந்திரநகர் மாவட்டம், மேற்கில் கட்ச் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது பதான் மாவட்டம்.

மத்திய கால வரலாறு

சோலங்கி குலத்தை நிறுவிய முதலாம் பீமதேவன், இரண்டாம் பீமதேவன் மற்றும் முதலாம் கர்ணதேவன் ஆகியோர் பதான் நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். ராணி உதயமதி நிறுவிய ராணியின் குளம் இந்நகரை அழகு படுத்துகிறது.

மாவட்ட வரலாறு

பனஸ்கந்தா மாவட்டம் மற்றும் மகிசனா மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு பதான் மாவட்டம் 2000இல் புதிதாக துவக்கப்பட்டது.

வருவாய் வட்டங்கள்

  1. பதான் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
  2. பதான்
  3. சந்தல்பூர்
  4. ராதன்பூர்
  5. சித்தாப்பூர்
  6. ஹரிச்
  7. சாமி
  8. சனாஸ்மா

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கள் தொகை 1,342,746 ஆக உள்ளது.[1] .மக்கள் தொகை அடர்த்தி 234. எழுத்தறிவு 73.47%. பாலினவிகிதம் 1000 ஆண்களுக்கு 935 பெண்கள். [1]

பார்க்க வேண்டிய இடங்கள்

  1. ஆயிரம் சிவலிங்கங்கள் ஏரி
  2. ராணியின் குளம்
  3. பாஞ்சார் பார்சுவநாதர் கோயில்
  4. சாம்லா பார்சுவநாதர் கோயில்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.