சுரேந்திரநகர் மாவட்டம்

சுரேந்திரநகர் மாவட்டம் (Surendranagar district) சுரேந்திரநகரை நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. குசராத்து மாநிலத்தின் மேற்கு பகுதியில், கத்தியவார் தீபகற்பத்தில், சௌராஷ்டிர பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மக்கட்தொகை ஏறத்தாழ 17 இலட்சம். சுரேந்திரநகரை முன்பு `ஜாலா இராசபுத்திரர்கள்` ஆணடதால் இந்நகரை ஜாலா நகர்` என்று முன்பு அழைக்கப்பட்டது. சுரேந்திரநகர் மாநகராட்சி பகுதி நான்கு இலட்சம் மக்கள் கொண்டது. மாவட்டத் தலைநகரான இந்நகர் உயர்தொழில் நுட்பம் கொண்ட மாளிகைகள் அதிகமாக உள்ளது. இந்நகர், இந்தியாவின் பருத்தி நகர் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

மாவட்ட எல்லைகள்

சுரேந்திரநகர் மாவட்டத்தின் எல்லைகளாக, வடக்கே கட்சு மாவட்டம், கிழக்கே அகமதாபாத் மாவட்டம், தெற்கே பவநகர் மாவட்டம், மேற்கே ராஜ்கோட் மாவட்டம் அமைந்துள்ளது.

மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம்

2011ஆன் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 17,55,875 ஆகும். மாவட்டத் தலைநகரான சுரேந்திரநகரில் மட்டும் நான்கு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். 640 மாவட்டங்களைக் கொண்ட இந்தியாவில், மக்கள் தொகையில் இம்மாவட்டம் 274வது இடத்தில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 167 நபர்கள் என்ற கணக்கில் மக்கள் தொகை அடர்த்தி உள்ளது. கடந்த 2001 – 2011 ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை 15 விழுக்காடு உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தின் ஆண்-பெண் விகிதத் தொடர்பு (தகவு) (Ratio) 1000ஆண்களுக்கு 929 பெண்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில் கல்வி அறிவு 73.19 விழுக்காடாக உள்ளது. இம்மாவட்டத்தின் அதிக மக்கட்தொகையினர் சமண சமயத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதர முதன்மையான நகரங்கள்

சுரேந்திரநகர் மாவட்டத்தில், சுரேந்திர நகர் தவிர இதர நகரங்கள் வருமாறு, தாரங்கதாரா, ஹல்வாத், வாத்வான், லிம்ப்டி, சூதா, லக்தர், கடோசன்ராஜ், மூலி, செய்லா, தங்காட் மற்றும் தர்னேதார்.

மாவட்டப் பொருளாதாரம்

வணிகம்,(குறுந்தொழில் நடுத்தரத்தொழில்கள்)

ரொட்டி, மட்பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்கள், நோய் நீக்கும் மருந்துகள், பொறியியல் தளவாடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சுரங்கப்பாறை உப்பு, சரிகை நூல், பருத்தி ஆடைகள், வேதியல் பொருட்கள், நெசவுக்கருவிகள், கழிவுநீர் கருவிகள் தயாரிக்கும் குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.

இயற்கை வளங்கள்

உப்பு சுரங்கங்கள்

இந்தியாவின் உப்பு உற்பத்தியில் கிட்டத்தட்ட 25 விழுக்காடு இம்மாவட்டத்தில் உள்ள உப்பு சுரங்கங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

சரிகை, பருத்தி துணி & நூல்

இம்மாவட்டம் பருத்திக்கொட்டை, பருத்தி நூல், பருத்தித் துணி உற்பத்தித்துறையில் சிறந்து விளங்குகிறது. இங்கு கணக்கற்ற உலகத்தரம் வாய்ந்த பருத்தி நூல் ஆலைகளும், துணி ஆலைகளும் உள்ளது.

பருத்தி கொட்டையிலிருந்து எடுக்கப்படும் புண்ணாக்கு மற்றும் பருத்திக் விதைகள், மற்றும் பருத்தி கொட்டை எண்ணெய் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக விளங்குகிறது.

தங்க சரிகை மற்றும் செயற்கை சரிகை உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

.==குறிப்பிடத்தக்கவர்கள்==

குறிப்புதவிகள்

  • சுரேந்திரநகர் SurendranagarOnline
  • மக்கட்தொகை கணக்கெடுப்பு
  • குசராத்து மாநில அரசின் இணையதளம்
  • சுரேந்திரநகர் மாவட்ட இணைய தளம் Official site
  • சுற்றுலா இடங்கள் places in Surendranagar
  • எனது சுரேந்திரநகர் MySurendranagar
  • சுரேந்திரநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளம் Surendranagar Collector

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.