பண்டு
பண்டு (Land of Punt) என்பது பண்டைய எகிப்து நாட்டின் வணிகப் பங்காளி நாடு என்று எகிப்திய வரலாற்று இலக்கியங்கள் குறிக்கின்றன. இது தற்போது எங்குள்ளது என்பது பற்றி அறிஞர்களிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் இந்நாடு சோமாலியா, சிபூட்டி, எரித்திரியா, சூடான் ஆகிய தற்போதைய நாடுகள் அடங்கிய பகுதி என்றும்[1] சிலர் இது அராபியத் தீபகற்பம் எனவும்[2] சிலர் இது பாண்டியர் நாடு எனவும் கூறுகின்றனர்.[3] மற்றொரு ஆராய்ச்சி இதை எத்தியோப்பியா நாடென்றும் கூறுகிறது.[4]

எகிப்தியர்களின் பண்டு நாட்டு படை எடுப்புகள்

தென்பாண்டி நாடு
இது பாண்டியர் நாடாக இருக்கலாம் என்பது தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அதன்படி பண்ட் என்பது பாண்டி நாடு என்பதும், ஓவிர் என்பது உவரி என்ற தென்பாண்டி நாட்டுத் துறைமுகம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். எகிப்தியர் பண்டு என்ற நாட்டையும் அதிலுள்ள ஓவிர் என்ற துறைமுகத்தையும், அதனருகே கிடைக்கும் தங்கம், தேக்கு, மனப் பொருட்கள் ஆகியவற்றையும் இறக்குமதி செய்ததும் அல்லாமல் அந்த நாட்டையே தங்கள் மூலத் தாயகமென்றும் குறிப்பதால் அது பாண்டி நாடு என்பது தமிழறிஞர் கருத்து.[3] கி.மு. இரண்டாம் ஆயிரம் ஆன்டுகளில் இப்பகுதி குறிக்கப்படுவதால் இதை பாண்டியர் வாழ்ந்ததாக கருதப்படும் குமரிக்கண்டம் என்று கூறுவோருன் உண்டு.[5] இதற்கு வலுசேர்க்கும் விதமாக தற்போதைய சுயஸ் கால்வாய் வழியாகவே பாண்டியர்கள் பண்டைய எகிப்து மற்றும் பண்டைய ரோம் நகரோடு பண்டு காலம் முதல் ஜூலியன் காலம் வரை வணிகம் செய்ததாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.[6]
மேற்கோள்கள்
- Simson Najovits, Egypt, trunk of the tree, Volume 2, (Algora Publishing: 2004), p.258.
- Dimitri Meeks - Chapter 4 - “Locating Punt” from the book “Mysterious Lands”, by David B. O'Connor and Stephen Quirke.
- முந்நீர் விழா (1961). தென்னாட்டுப் போர்க்களங்கள். ஔவை நூலகம்.
- owenjarus (ஏப்ரல் 23, 2010). "Baboon Mummy Tests Reveal Ethiopia and Eritrea as Ancient Egyptians' 'Land of Punt'". http://heritage-key.com.+பார்த்த நாள் சூலை 24, 2012.
- பொ. சங்கரப்பிள்ளை (B.A. (Lond). B. Com. (Hons). (Lond.), M. Sc. (Econ (Lond.). "நாம் தமிழர்". கொழும்புத் தமிழ்ச் சங்கம். பார்த்த நாள் ஆகஸ்ட் 15, 2012.
- "Suez Canal : Was this part of the route when Pandyan were trading with the Egyptians, Greeks and Romans?". www.lankanewspapers.com (27 பிப்ரவரி, 2008). பார்த்த நாள் சூலை 24, 2012.
வெளி இணைப்புகள்
- கா. அப்பாத்துரை. "தென்னாட்டுப் போர்க்களங்கள்". http://siragu.com.+பார்த்த நாள் சூலை 24, 2012.
- The Land of Punt with quotes from Breasted (1906) and Petrie (1939)
- Queen Hatasu, and Her Expedition to the Land of Punt by Amelia Ann Blanford Edwards (1891)
- Deir el-Bahri: Mortuary Temple of Hatshepsut
- Hall of Punt at Deir el-Bahri; and Where was Punt? discussion by Dr. Karl H. Leser
- Queen of Punt syndrome