எகிப்தியக் கோவில்கள்
எகிப்தியக் கோவில்கள் பண்டைய எகிப்தின் பாரோ மன்னர்களினதும், எகிப்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்த மக்களினதும் வழிபாட்டுக்கெனக் கட்டப்பட்டவையாகும். இக்கோவில்கள் அதில் குடியிருந்த மன்னர்களினது அல்லது தெய்வங்களினது இல்லமாகக் கருதப்பட்டது. இங்கு எகிப்தியர்கள் பலியிடல், விழாக்கள் போன்ற தமது சமயச் சடங்குகளை மேற்கொண்டனர். இக்கோவில்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பாரோக்களின் கடைமையாகக் காணப்பட்டது. இதற்காக பாரோக்கள் குறிப்பிடத்தக்களவு வளங்களை கோவிலின் கட்டுமானத்துக்கும் பராமரிப்புக்கும் ஒதுக்கினர். பெரும்பாலான சடங்குகள் பாரோக்களால் நியமிக்கப்பட்ட பூசகர்களினால் நடத்தப்பட்டன. தேவையான போது பாரோக்கள் பெரும்பாலான சடங்குகளை மேற்கொள்ள பூசகர்களை அனுமதித்தனர். எனினும் மக்களுக்கு இவ்வாறான சடங்குகளில் நேரடியாகக் கலந்துகொள்ளவோ கோவிலின் மிகவும் புனிதமான இடங்களில் நுழையவோ அனுமதியளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கோவிலானது எகிப்திலிருந்த எல்லா வகுப்பு மக்களுக்கும் முக்கியமான வழிபாட்டிடமாக இருந்தது. அவர்கள் அங்கு பிரார்த்தனை செய்யவும், காணிக்கைகளைச் செலுத்தவும், அங்கிருந்த தெய்வத்திடம் அறிவுரைகளைக் கேட்பதற்கும் சென்றனர்.

கோவிலின் முக்கியப் பகுதி கருவறையாகும். இங்கு அக்கோவிலிலுள்ள தெய்வத்தின் உருவச்சிலை காணப்பட்டது. கருவறைக்கு வெளியே இருந்த அறைகள் மிகப் பிரமாண்டமாகவும் அழகாகவும் உருவாக்கப்பட்டன. எனவே, கி.மு.4000இல் சிறியவையாக இருந்த இந்தக் கோயில்கள் கி.மு. 1550-1070 காலப்பகுதியில் எகிப்திய ராச்சியத்தின் கீழ் பிரமாண்டமான மாளிகைகளாக வளர்ந்தன. இம் மாளிகைகளே பண்டைய எகிப்தியக் கட்டடக்கலையின் மாபெரும் உதாரணமாகவும், நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் கட்டடமாகவும் காணப்படுகின்றன. அவர்களது வடிவமைப்பில் மூடப்பட்ட மண்டபங்கள், திறந்தவெளி அரங்குகள், விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் பாதையில் அமைக்கப்பட்ட பாரிய நுழைவாயில்கள் என்பன காணப்பட்டன. இவைதவிர, கோவிலைச் சுற்றி அமைக்கப்பட்ட வெளிமதிலின் உள்ளே பல்வேறு இரண்டாம் நிலைக் கட்டடங்களும் காணப்பட்டன.
இவ்வாறான கோவில்கள் பாரியளவிலான நிலங்களையும் கொண்டிருந்தன. அந்நிலங்களைப் பராமரிப்பதற்கென ஆயிரக்கணக்கான வேலையாட்களையும் அது கொண்டிருந்தது. இதனால் கோவில்கள் சமய நிலையங்களாக மட்டுமன்றி முக்கிய பொருளாதார மையங்களாகவும் திகழ்ந்தன. இத்தகைய கோவில்களை நிர்வகித்த பூசாரிகள் ஆட்சியதிகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பிரயோகித்தனர். மேலும் சிலவேளைகளில் மன்னர்களின் அதிகாரத்துக்கு சவால் விடுமளவுக்கும் அவர்கள் முன்னேறியிருந்தனர்.
எகிப்தில் கோவில் கட்டும் பணி எகிப்தின் வீழ்ச்சி மற்றும் ரோமப் பேரரசுக்கு அடிமைப்படும் வரையில் தொடர்ந்தது. கிறித்தவ மதத்தின் வருகையைத் தொடர்ந்து எகிப்திய சமயம் பாரிய இடைஞ்சல்களை எதிர்நோக்கியது. அதன் கடைசிக் கோவில் கி.பி.550ல் மூடப்பட்டது.பல நூற்றாண்டு காலமாக இக் கட்டடங்கள் அழிவையும் தொடர் புறக்கணிப்பையும் எதிர்நோக்கின. ஆயினும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பண்டைய எகிப்தைப் பற்றிய ஆர்வம் ஐரோப்பாவில் பரவியது. இதனால் எகிப்தியவியல் எனும் புதிய விஞ்ஞான ஆராய்ச்சியியலும் தோன்றியது. எகிப்திய நாகரிகத்தின் சிதிலங்களைப் பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளும் இங்கு வரத்தொடங்கினர்.அதிகளவிலான கோவில்கள் இன்று தப்பியுள்ளன. இவற்றுட் சில, உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களாகவும் மாறியுள்ளன. நவீன எகிப்தின் பொருளாதாரத்துக்கு இவை பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. எகிப்தியவியலாளர்கள் தப்பிய கோவில்கள் மற்றும் அழிந்த கோவில்களின் எச்சங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். ஏனெனில் இவை பண்டைய எகிப்திய சமூகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான மிக இன்றியமையாத ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன.
செயற்பாடுகள்
சமயச் செயற்பாடுகள்

பண்டைய எகிப்தியக் கோவில்கள் பூமியில் கடவுள்கள் வாழ்வதற்கான இடங்களாக கருதப்பட்டன. இதனால், கோவிலை குறிப்பதற்கு எகிப்தியர்கள் பயன்படுத்திய ḥwt-nṯr எனும் சொல் "கடவுளின் மாளிகை" எனும் பொருளைத் தருவதாகும்.[1] கோவிலில் கடவுளின் பிரசன்னம், மனிதனையும் கடவுளையும் தொடர்புபடுத்தியதோடு, சடங்குகளினூடாக கடவுளுடன் மனிதன் தொடர்பாடவும் வழிவகுத்தது. இச் சடங்குகள், கடவுளை கோவிலில் தொடர்ந்து இருப்பதற்கும், இயற்கையின் மீது சரியான முறையில் ஆட்சி செலுத்தவும் உதவுவதாக நம்பப்பட்டது. இதனால், அவை எகிப்திய நம்பிக்கையின்படி மனித சமுதாயத்தினதும் இயற்கையினதும் விதிக்கப்பட்ட கடமையின் சீரான போக்குக்கு வழியமைத்தது.[2] இக் கடமையை சீராகப் பேணுவதே எகிப்திய சமயத்தினதும்,[3] கோவிலினதும் முக்கிய நடவடிக்கையாக இருந்தது.[4]
பாரோக்கள் கடவுள் தன்மையைக் கொண்டிருப்பதாக கருதப்பட்டதால்,[Note 1] ஒரு புனிதமான அரசராக பாரோக்கள், எகிப்தின் கடவுளுக்கான பிரதிநிதியாகவும், விதிக்கப்பட்ட கடமைகளுக்கான ஆதரவாளராகவும் கருதப்பட்டனர்.[6] எனவே, கொள்கை ரீதியில், கோவிலில் சமயச் சடங்குகளை மேற்கொள்வது அவனது கடமையாக இருந்தது. ஒரு பாரோ உண்மையிலேயே தவறாது சடங்குகளில் கலந்துகொண்டானா என்பது சந்தேகத்துக்கிடமானதே. மேலும், எகிப்து முழுவதிலும் கோவில்கள் பரந்து காணப்பட்டமையால் நிச்சயமாக அவனால் எல்லாக் கோவில்களுக்கும் சமுகமளிக்க முடிந்திருக்காது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடமைகள் பூசாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் ஒரு பாரோ தனது ஆட்சிக்குட்பட்ட கோவில்களைப் பராமரிப்பதற்கும், அவற்றை விரிவாக்குவதற்கும் உதவி வழங்கியுள்ளான்.[7]
பாரோ தனது சடங்கு மேற்கொள்ளும் உரிமையை வேறொருவருக்கு வழங்கியிருந்தாலும், சடங்குகள் செய்யும் உரிமை கட்டாயமாக உயர் நிலை பூசாரிகளுக்கே வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகளில், பொதுமக்கள் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டிருந்தது. பெரும்பாலான சடங்குகள் கோவில்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்த தனியான மடங்களில் நடைபெற்றன. எவ்வாறாயினும், மனிதருக்கும் கடவுளர்க்குமான பிரதான இணைப்பு என்ற வகையில், இக்கோவில்கள் சாதாரண பொதுமக்களின் மதிப்பை பெற்றிருந்தது.[8]
ஒவ்வொரு கோவிலும் ஒரு முதன்மைக் கடவுளைக் கொண்டிருந்ததுடன் பெரும்பாலான கோவில்கள் ஏனைய தெய்வங்களையும் உள்ளடக்கியிருந்தன.[9] எவ்வாறாயினும் எல்லாத் தெய்வங்களுக்கும் கோவில்கள் காணப்படவில்லை. பெரும்பாலான பேய்களும் வீட்டுத் தெய்வங்களும் முதன்மையாக மாய மற்றும் தனிப்பட்ட சமய நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்ததோடு, கோவில் விழாக்களில் இவற்றின் பிரசன்னம் குறைவாகவே இருந்தது. மேலும் சில தெய்வங்கள் பிரபஞ்ச இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருந்தபோதும், அவற்றுக்கு கோவில்கள் கட்டப்படவில்லை. இதற்கான காரணமும் அறியப்படவில்லை.[10] தமக்கெனத் தனிப்பட்ட கோவில்களை கொண்டிருந்த தெய்வங்களில் பல குறிப்பாக எகிப்தின் சில பகுதிகளில் மதிப்பு பெற்றிருந்தன. எனினும், உள்ளூர் தொடர்புகளைக் கொண்டிருந்த பல தெய்வங்களும் நாடளாவிய ரீதியில் முக்கியம் பெற்றிருந்தன.[11] நாட்டின் எல்லாப் பாகங்களிலும் வழிபடப்பட்ட தெய்வங்கள் கூட தமது முதன்மைக் கோவில்கள் அமைந்துள்ள நகரங்களுடன் தொடர்பு பட்டிருந்தன. எகிப்திய படைப்புப் புனைகதைகளில், முதலாவது கோவிலானது ஒரு தெய்வத்தின் புகலிடமாக உருவானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறித்த தெய்வம் (ஒவ்வொரு நகரிலும் இத் தெய்வத்தின் பெயர் மாறுபடுகிறது.) படைப்பு ஆரம்பமான மணல் திட்டு ஒன்றின்மீது நின்றிருந்ததாகவும், அவ்விடமே முதல் கோவிலாக மாறியதாகவும் அது குறிப்பிடுகிறது.[12] தெய்வத்தின் முதலாவது வீடு என்றவகையிலும், ஒரு நகரின் கற்பனை ரீதியிலான உருவாக்கப் புள்ளி என்ற வகையிலும், கோவிலானது குறித்தவொரு பகுதியின் மைய நிலையமாகக் கருதப்பட்டதோடு, அந்நகரின் காவல் தெய்வம் ஆட்சிபுரியும் இடமாகவும் போற்றப்பட்டது.[13]
பாரோக்கள் இறப்புக்குப் பின்னான வாழ்வில் தமது ஆவிகளை நீடித்திருக்கச் செய்யும் பொருட்டு காணிக்கைகள் செலுத்துமுகமாகவும் கோவில்களைக் கட்டினர். இவை பெரும்பாலும் அவர்களது கல்லறைகளின் அருகிலேயே அமைந்திருந்தன. இக் கோவில்கள் வழிவழியாக "கல்லறைக் கோவில்கள்" என அழைக்கப்பட்டு வந்ததோடு, திருக்கோவில்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. எனினும், அண்மைய காலங்களில், செரார்ட் கேனி போன்ற எகிப்தியவியலாளர்கள் இப்பிரிவினை தெளிவற்றுக் காணப்படுவதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எகிப்தியர்கள் கல்லறைக் கோவில்களை வேறு பெயர் கொண்டு அழைத்திருக்கவில்லை.[14][Note 2] இறந்தோருக்கான சடங்குகளும், தெய்வங்களுக்கான சடங்குகளும் பிரித்தறிய முடியாதவை; இறப்பைச் சூழ்ந்த குறியீட்டியல் அனைத்து எகிப்தியக் கோவில்களிலும் காணக்கிடைக்கிறது.[16] கல்லறைக் கோவில்களில் குறிப்பிட்டளவு கடவுள் வழிபாடும் காணப்பட்டுள்ளது. எகிப்தியவியலாளரான இசுடீபன் குயிர்க்கின் கூற்றுப்படி, "எல்லாக் காலப்பகுதியிலும் அரச சடங்குகள் கடவுளுடன் தொடர்பு பட்டிருந்தன. அதேபோல்.... கடவுள் தொடர்பான சடங்குகளும் மன்னருடன் தொடர்பு பட்டிருந்தன".[17] எவ்வாறாயினும், சில கோவில்கள் இறந்த மன்னர்களை நினைவு கூரவும், அவர்களது ஆவிகளுக்கு காணிக்கை செலுத்தவும் பயன்படுத்தப்பட்டமை தெளிவாகின்றது. இவற்றின் சரியான நோக்கம் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. இவை மன்னர்களையும் கடவுளர்களையும் ஒருங்கிணைத்து, மன்னனின் நிலையை சாதாரண மன்னர் நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்துவதற்குப் பயன்பட்டிருக்கலாம்.[18] எச் சந்தர்ப்பத்திலும், கல்லறைக் கோவில்களையும் திருக் கோவில்களையும் பிரித்தறிவதில் ஏற்படும் சிரமம், எகிப்திய நம்பிக்கையில் அரசுரிமையும், கடவுள்நிலையும் ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பிரதிபலித்து நிற்கின்றது.[19]
மேலும் பார்க்க
மேற்கோள்களும் குறிப்புக்களும்
- குறிப்புக்கள்
- வூல்ஃப்காங் மற்றும் டைட்ரிச் வில்டங் போன்ற பல எகிப்தியவியலாளர்கள், எகிப்தியர்கள் உண்மையில் தமது அரசரை கடவுளாகக் கருதவில்லை என வாதிட்டுள்ளனர். எவ்வாறாயினும், அரசவை மற்றும் சமயத் தலங்களால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களில், அரசனின் கடவுள் தன்மை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, சாதாரண எகிப்தியர்கள் இந்த நம்பிக்கையை உடையோராக இருந்தனரா என்பது ஒருபுறமிருக்க, மன்னனின் கடவுள் தன்மையே எகிப்தியக் கோவில் பற்றிய கருத்தியலுக்கு அடிப்படையானதாகும்.[5]
- "mansion of millions of years" ("ஆயிரவாண்டுகால வசிப்பிடம்") எனும் சொற்றொடர் கல்லறைக் கோவில்களுக்கான எகிப்திய வார்த்தையாகக் கருத்திலெடுக்கப்படுகிறது. எனினும், பல இடங்களில் எகிப்தியர்கள் இச் சொற்றொடரின் மூலம் பொதுவாக "கல்லறை" எனக் கருதப்படாத புனித கட்டடங்களையும் குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, லக்சர் கோவில் மற்றும் கர்னாக்கிலுள்ள மூன்றாம் துத்மோசின் விழா மண்டபம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[14] பற்றீசியா இசுபென்சரின் கூற்றுப்படி, "குறித்த கோவிலானது அப் பகுதியின் முதன்மைத் தெய்வமொன்றுக்குக்காக கட்டப்பட்டிருந்தாலும், மன்னரை முதன்மையாகக் கொண்ட சடங்குகள் நிகழ்த்தப்படும் எந்தவொரு கோவிலும்" இச்சொல்லினால் குறிக்கப்பட்டது.[15]
- மேற்கோள்கள்
- Spencer 1984, p. 22, 44; Snape 1996, p. 9
- Dunand and Zivie-Coche 2005, pp. 89–91
- Assmann 2001, p. 4
- Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in Shafer 1997, pp. 1–2
- Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years', in Shafer 1997, pp. 126, 281
- Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in Shafer 1997, p. 3
- Wilkinson 2000, pp. 8, 86
- Dunand and Zivie Coche 2005, pp. 103, 111–112
- Meeks & Favard-Meeks 1996, pp. 126–128
- Wilkinson 2000
- Teeter, Emily, "Cults: Divine Cults", in Redford 2001, p. 340, vol. I
- Reymond 1969, pp. 323–327
- Assmann 2001, pp. 19–25
- Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years'", in Shafer 1997, pp. 89–102
- Spencer 1984, p. 25
- Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in Shafer 1997, pp. 3–4
- Quirke, Stephen, "Gods in the temple of the King: Anubis at Lahun", in Quirke 1997
- Haeny, Gerhard, "New Kingdom 'Mortuary Temples' and 'Mansions of Millions of Years'", in Shafer 1997, pp. 123–126
- Shafer, Byron E., "Temples, Priests, and Rituals: An Overview", in Shafer 1997, pp. 2–3
மேற்கோள் காட்டப்பட்ட படைப்புக்கள்
- Arnold, Dieter (1991). Building in Egypt: Pharaonic Stone Masonry. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-511374-8.
- Arnold, Dieter (2003) [1994]. The Encyclopedia of Ancient Egyptian Architecture. Translated by Sabine H. Gardiner and Helen Strudwick. Edited by Nigel and Helen Strudwick. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-11488-9.
- Arnold, Dieter (1999). Temples of the Last Pharaohs. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-512633-5.
- Jan Assmann (2001) [1984]. The Search for God in Ancient Egypt. Translated by David Lorton. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-3786-5.
- Bleeker, C. J. (1967). Egyptian Festivals: Enactments of Religious Renewal. E. J. Brill.
- Dunand, Françoise; Christiane Zivie-Coche (2005) [2002]. Gods and Men in Egypt: 3000 BCE to 395 CE. Translated by David Lorton. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-8853-2.
- Egypt State Information Service. "Tourism: Introduction". பார்த்த நாள் February 24, 2011.
- Evans, J. A. S. (1961). "A Social and Economic History of an Egyptian Temple in the Graeco-Roman Period". Yale Classical Studies 17: 100–110.
- Brian M. Fagan (2004). The Rape of the Nile: Tomb Robbers, Tourists, and Archaeologists in Egypt, Revised Edition. Westview Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8133-4061-6.
- Frankfurter, David (1998). Religion in Roman Egypt: Assimilation and Resistance. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-07054-7.
- Haring, B. J. J. (1997). Divine Households: Administrative and Economic Aspects of the New Kingdom Royal Memorial Temples in Western Thebes. Nederlands Instituut voor het Nabije Oosten. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-6258-212-5.
- Johnson, Janet H. (1986). "The Role of the Egyptian Priesthood in Ptolemaic Egypt". in Lesko, Leonard H.. Egyptological Studies in Honour of Richard A. Parker. Brown. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87451-321-9.
- Mark Lehner (1997). The Complete Pyramids: Solving the Ancient Mysteries. Thames and Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05084-8.
- Lipiński, Edward, தொகுப்பாசிரியர் (1978). State and Temple Economy in the Ancient Near East. Departement Oriëntalistiek. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:90-70192-03-9.
- Meeks, Dimitri; Christine Favard-Meeks (1996) [1993]. Daily Life of the Egyptian Gods. Translated by G. M. Goshgarian. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-3115-8.
- Quirke, Stephen (2001). The Cult of Ra: Sun Worship in Ancient Egypt. Thames and Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05107-0.
- Quirke, Stephen, தொகுப்பாசிரியர் (1997). The Temple in Ancient Egypt: New Discoveries and Recent Research. British Museum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7141-0993-2.
- Donald B. Redford, தொகுப்பாசிரியர் (2001). The Oxford Encyclopedia of Ancient Egypt. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-510234-7.
- Reymond, E. A. E. (1969). The Mythical Origin of the Egyptian Temple. Manchester University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7190-0311-3.
- Ritner, Robert Kriech (1993). The Mechanics of Ancient Egyptian Magical Practice. The Oriental Institute of the University of Chicago. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-918986-75-3.
- Robins, Gay (1986). Egyptian Painting and Relief. Shire Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85263-789-6.
- Serge Sauneron (2000) [1988]. The Priests of Ancient Egypt, New Edition. Translated by David Lorton. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-8654-8.
- Shafer, Byron E., தொகுப்பாசிரியர் (1997). Temples of Ancient Egypt. Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-3399-1.
- Snape, Steven (1996). Egyptian Temples. Shire Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7478-0327-7.
- Spalinger, Anthony J. (October 1998). "The Limitations of Formal Ancient Egyptian Religion". Journal of Near Eastern Studies 57 (4).
- Spencer, Patricia (1984). The Egyptian Temple: A Lexicographical Study. Kegan Paul International. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7103-0065-4.
- Teeter, Emily (Summer 1993). "Popular Worship in Ancient Egypt". KMT 4 (2).
- Richard H. Wilkinson (2000). The Complete Temples of Ancient Egypt. Thames and Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05100-3.
- Ucko, Peter J.; Tringham, Ruth; Dimbleby, G. W., தொகுப்பாசிரியர்கள் (1973). Man, Settlement and Urbanism. Duckworth. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7156-0589-5.
மேலதிக வாசிப்புக்கு
- Arnold, Dieter (1992) (in German). Die Tempel Ägyptens: Götterwohnungen Kültstatten, Baudenkmäler. Bechtermünz Vlg. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-86047-215-1.
- Oakes, Lorna (2003). Temples and Sacred Centres of Ancient Egypt: A Comprehensive Guide to the Religious Sites of a Fascinating Civilisation. Southwater. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84215-757-4.
- Vörös, Győző (2007). Egyptian Temple Architecture: 100 Years of Hungarian Excavations in Egypt, 1907–2007. Translated by David Robert Evans. The American University in Cairo Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:963-662-084-9.