பகரம்பூர்

பகரம்பூர் அல்லது பெர்காம்பூர் (Baharampur) (pronounced asˌbɑ:(h)ərəmˌpʊə) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் மையத்தில் அமைந்த முர்சிதாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.

பகரம்பூர்
பெர்காம்பூர்
நகராட்சி
Berhampore montage
பகரம்பூர்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24.1°N 88.25°E / 24.1; 88.25
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்முர்சிதாபாத்
பரப்பளவு தரவரிசை7th
ஏற்றம்18
மக்கள்தொகை (2011)
  மொத்தம்3,05,609
மொழிகள்
  அலுவல் மொழிவங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்742101, 742102, 742103
தொலைபேசி குறியீடு எண்91-3482-2xxxxx
வாகனப் பதிவுWB57, WB58
சட்டமன்றத் தொகுதிமுர்சிதாபாத்
இணையதளம்berhamporemunicipality.org

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாநகரத்தின் மக்கள்தொகை 3,05,609 ஆகும். முன்னாள் இந்நகரத்தில் பிராமணர்கள் அதிகம் வாழ்ந்ததால், இதனை பிரம்மபுரம் என்று அழைத்தனர். இந்நகரம் கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 200 கிமீ தொலைவில் உள்ளது.

பெர்காம்பூர் கோட்டை, 1850

புவியியல்

பெர்காம்பூர் நகரம் 24.1°N 88.25°E / 24.1; 88.25 பாகையில் அமைந்துள்ளது.[1] கொல்கத்தாவிலிருந்து வடக்கே 200 கிமீ தொலைவில், கங்கை ஆற்றின் துணை ஆறான பாகீரதி ஆற்றின் கரையில் பெர்காம்பூர் நகரம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பெர்காம்பூர் நகரத்தில் மக்கள்தொகை 3,05,609 ஆகும். அதில் ஆண்கள் 1,56,489 ஆகவும், பெண்கள் 1,49,120 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 23,182 ஆக உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 88.8% ஆகவுள்ளது.[2]

போக்குவரத்து

தொடருந்து

பெர்காம்பூர் கோர்ட் தொடருந்து நிலையம்

கொல்கத்தா, புரி, குவகாத்தி போன்ற நகரங்களுக்குச் செல்ல, பெர்காம்பூர் கோர்ட் தொடருந்து நிலையத்திலிருந்து தொடருந்து வசதிகள் உள்ளது. [3]

சாலைப் போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை எண் 12 மற்றும் 34 பெர்காம்பூர் நகரத்தின் வழியாக செல்கிறது.

பெர்காம்பூர் நகரத்திலிருந்து கொல்கத்தா, ஹவுரா, துர்காப்பூர், சியூரி, ஆசன்சோல், போல்பூர், வர்தமான், பாங்குரா, ஜார்கிராம், மால்டா, டார்ஜிலிங், சிலிகுரி போன்ற நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Maps, Weather, and Airports for Baharampur, India". பார்த்த நாள் 1 April 2018.
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 21 October 2011.
  3. பெர்காம்பூர் கோர்ட் இரயில்வே நிலையம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.