ப. நீலகண்டன்

ப. நீலகண்டன் (2 அக்டோபர் 1916 - 3 செப்டம்பர் 1992) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனராவார். திரைப்படங்களுக்கு கதை, வசனங்களும் எழுதினார். இவர் 2 அக்டோபர் 1916 அன்று தமிழ்நாட்டின் விழுப்புரத்தில் பிறந்தார். 1947இல் இவருடைய நாம் இருவர் நாடகத்தினை அவிச்சி மெய்யப்பச் செட்டியார் திரைப்படமாக எடுத்தார். 1948இல் வேதாள உலகம் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். 1951இல் ஓர் இரவு திரைப்படத்தில் துணை இயக்குனராகப் பணியாற்றினார். இத்திரைப்படத்திற்கு வசனத்தினை கா. ந. அண்ணாதுரை எழுதினார்.

ப. நீலகண்டன்
பிறப்புஅக்டோபர் 2, 1916(1916-10-02)
இறப்புசெப்டம்பர் 3, 1992(1992-09-03) (அகவை 75)
செயல்பட்ட 
ஆண்டுகள்
1945-1980

ஏஎல்எஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் மூலம் அம்பிகாபதி (1957) மற்றும் திருடாதே (1961) ஆகிய இரு திரைப்படங்களை தயாரித்தார். மேலும் தமிழ், கன்னடத் திரைப்படங்கள் பலவற்றை இயக்கினார். அவற்றில் 1957 இல் சக்கரவர்த்தி திருமகள் தொடங்கி 1976இல் நீதிக்கு தலைவணங்கு முதல் எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை இயக்கினார். இதனால் எம்.ஜி.ஆரின் ஆசுதான இயக்குனர் என்று புகழப்பட்டார்.

திரைப்படங்கள்

ஆண்டு நாள் திரைப்படம் மொழி குறிப்பு
இயக்குநர் கதை/ திரைக்கதை
1981 மார்ச்சு 6 தெய்வத் திருமணங்கள் Y தமிழ் படம் மூன்று கதைகளைக் கொண்டது. கே. வி. மகாதேவன் இசையமைத்த மீனாட்சி கல்யாணம் பகுதி இவருடையது.
1978 சனவரி 14 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் N N தமிழ் எம்.ஜி.ஆர் உடன், (பி. நீலகண்டன் வசனம்)

ம. சு. விசுவநாதன், இசை

1976 மார்ச்சு 18 நீதிக்கு தலைவணங்கு Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (17/17),

ம. சு. விசுவநாதன், இசை

1975 மே 9 நினைத்ததை முடிப்பவன் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (16/17),

ம. சு. விசுவநாதன், இசை

1974 சூலை 12 நேற்று இன்று நாளை Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (15/17),

ம. சு. விசுவநாதன், இசை

1973 மே 11 உலகம் சுற்றும் வாலிபன் N N தமிழ் எம்.ஜி.ஆர் உடன்,

ம. சு. விசுவநாதன், இசை

1972 ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (14/17),

ம. சு. விசுவநாதன், இசை

1972 பெப்ரவரி 4 சங்கே முழங்கு Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (13/17),

ம. சு. விசுவநாதன், இசை

1971 திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (12/17),

ம. சு. விசுவநாதன், இசை

1971 அக்டோபர் 18 நீரும் நெருப்பும் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (11/17),

ம. சு. விசுவநாதன், இசை

1971 சனவரி 26 குமரி கோட்டம் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (10/17),

ம. சு. விசுவநாதன், இசை

1970 மே 21 என் அண்ணன் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (9/17),

கே. வி. மகாதேவன்,இசை

1970 சனவரி 14 மாட்டுக்கார வேலன் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (8/17),

கே. வி. மகாதேவன், இசை

1968 சனவரி 14 கணவன் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (7/17),

ம. சு. விசுவநாதன், இசை

1968 ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (6/17),

ம. சு. விசுவநாதன், இசை

1967 செப்டம்பர் 7 காவல்காரன் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (5/17),

ம. சு. விசுவநாதன், இசை

1966 ஏப்ரல் 29 அவன் பித்தனா Y N தமிழ் மு. கருணாநிதி

ஆர். பார்த்தசாரதி, இசை

1965 திசம்பர் 25 ஆனந்தி Y தமிழ் ம. சு. விசுவநாதன், இசை
1965 அக்டோபர் 23 பூமாலை Y N தமிழ் அறிமுகம் மு. கருணாநிதி

ஆர். சுதர்சனம், இசை

1964 திசம்பர் 24 சுஜாக்கே ரகசே Y N சிங்களம் டி. ஆர். பாப்பா, இசை
1964 பூம்புகார் Y N தமிழ் அறிமுகம் மு. கருணாநிதி

ஆர். சுதர்சனம், இசை

1963 பெப்ரவரி 9 கொடுத்து வைத்தவள் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (4/17),

கே. வி. மகாதேவன், இசை

1963 ராஜ் மகால் Y இந்தி
1962 எதையும் தாங்கும் இதயம் Y N தமிழ் டி. ஆர். பாப்பா, இசை
1961 ஆகத்து 31 நல்லவன் வாழ்வான் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (3/17),

டி. ஆர். பாப்பா, இசை

1961 மார்ச்சு 23 திருடாதே Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (2/17),

எஸ். எம். சுப்பையா நாயுடு, இசை

1960 ஏப்ரல் 1 ஆடவந்த தெய்வம் Y N தமிழ் கே. வி. மகாதேவன் இசை
1958 ஆகத்து 21 சுனிதா Y N சிங்களம் டி. ஆர். பாப்பா இசை
1958 சூலை 16 தேடி வந்த செல்வம் Y N தமிழ்

இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா

1957 அக்டோபர் 18 அம்பிகாபதி Y Y தமிழ் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்
1957 சனவரி 18, சக்கரவர்த்தி திருமகள் Y N தமிழ் எம்.ஜி.ஆர் உடன் (1/17),
இசையமைப்பாளர்  ஜி. ராமநாதன்
1955 செப்டம்பர் 20 கோமதியின் காதலன் Y Y தமிழ் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்
1955 மார்ச்சு 12 மொதல தேதி Y கன்னடம் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1955 மார்ச்சு 12 முதல் தேதி Y Y தமிழ் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1955 நம்பேக்கா Y கன்னடம் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1954 ஏப்ரல் 13 கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி Y N தமிழ் இசையமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா
1951 ஏப்ரல் 11 ஓர் இரவு Y Y தமிழ் ஆர். சுதர்சனம், இசை
1949 திசம்பர் 22 வாழ்க்கை N Y தமிழ் இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன்

(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்

1948 ஆகத்து 11 வேதாள உலகம் N Y தமிழ் இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன்

(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்

1947 சனவரி 12 நாம் இருவர் N Y தமிழ் இயக்குநர் அவிச்சி மெய்யப்பச் செட்டியார், பி. நீலகண்டன் கதை மற்றும் வசனகர்த்தா

(எம்.வி.ராமனின் துணை இயக்குனர்களில் ஒருவர்) இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.