நைனா தேவி

நைனா தேவி (Naina Devi) என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இங்கு அமைந்த பார்வதிக்கான நைனா தேவி கோயில் புகழ் பெற்றது.

நைனா தேவி
  நகரம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம் பிலாஸ்பூர்
ஆளுநர் Acharya Dev Vrat[1]
முதலமைச்சர் ஜெய்ராம் தாகூர்[2]
மக்களவைத் தொகுதி நைனா தேவி
மக்கள் தொகை 1,161 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,161 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 63% ஆண்கள், 37% பெண்கள். சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நைனா தேவி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இந்நகரில் உள்ள நைனா தேவி மலைக்கோயில் சிறப்பு வாய்ந்ததாகும்.

நைனா தேவி கோயில்

ஸ்ரீ நைனா தேவி கோயில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் 21ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் செல்வதற்கு மலையைச் சுற்றிய சாலை வழியே சிறிது தொலைவு சென்று பின்னர் படி வழியே ஏறி செல்ல வெண்டும். அத்துடன் உச்சி வரை செல்வதற்கு வடச் சீருந்து வசதியும் உண்டு.

ஆகஸ்ட் 3, 2008 நெரிசல்

ஆகஸ்ட் 3, 2008 இல் இக்கோயிலில் திடீரென இடம்பெற்ற சன நெரிசலில் சிக்கி 146 பேர் கொல்லப்பட்டனர். 'நவராத்ரா' என்ற பண்டிகையையொட்டி, இக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மலைப் பகுதியில் சுமார் 4 கிமீ தொலைவுக்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பாதையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இதில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெண்களும் இருந்தனர்.

அப்போது, அருகேயுள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் கீழ் நோக்கி உருண்டு வருவதாக பக்தர்களிடையே வதந்தி பரவியது. இதையடுத்து, பக்தர்கள் அங்கும் இங்கும் ஓடும்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இருபுறமும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் உடைந்து விழுந்ததில் பலர் தடுப்புக் கம்பிகளை தாண்டி மலைப்பகுதியில் விழுந்தனர்.

கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதித்ததில் 146 பக்தர்கள் உடல் நசுங்கி பலியாகினர்; 50 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் 30 பேர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்[4].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.