நேபாள குடியரசுத் தலைவர்
நேபாள குடியரசுத் தலைவர், (President of the Federal Democratic Republic of Nepal) (நேபாளி: राष्ट्रपति), நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு மற்றும் முப்படைகளின் தலைவர் ஆவார். நேபாளத்தில் மன்னராட்சி ஒழித்து, நேபாளத்தை ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசாக அறிவித்த நாளில் குடியரசுத் தலைவர் பதவி மே 2008ல் உருவாக்கப்பட்டது. நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ஆவார்.
குடியரசுத் தலைவர் நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு
| |
---|---|
![]() நேபாள அரசின் சின்னம் | |
அதிகாரப்பூர்வ பட்டம் | மேன்மை தாங்கிய |
வாழுமிடம் | சீதள் நிவாஸ் |
நியமிப்பவர் | மறைமுகத் தேர்தல் |
பதவிக் காலம் | ஐந்தாண்டுகள் |
முதல் குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் |
உருவாக்கப்பட்ட ஆண்டு | 28 மே 2008 |
துணை குடியரசுத் தலைவர் | துணைக் குடியரசுத் தலைவர் |
ஊதியம் | நேபாள ரூபாய் 1,09,410 (மாதந்தோறும்)[1] |
இணைய தளம் | www.presidentofnepal.gov.np |
தற்போதைய குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி அக்டோபர், 2015ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இரண்டாம் முறையாக மார்ச், 2018ல் மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
நேபாள நாடாளுமன்றத்தின், பிரதிநிதிகள் சபை, தேசிய சபை உறுப்பினர்கள் மற்றும் ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், நேபாள குடியரசுத் தலைவர் தேர்ந்தேடுக்கப்படுகிறார்.
குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் குடியரசுத் தலைவர் பதவி வகிக்க இயலாது.
அதிகாரங்கள்
இந்தியக் குடியரசுத் தலைவர் போன்றே, நேபாளக் குடியரசுத் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் சடங்கு சம்பிரதாயம் போன்றதே. பிரதம அமைச்சரின் ஆலோசனையின் படியே நேபாள குடியரசுத் தலவர் செயல்படுகிறார்.
குடியரசுத் தலைவர் பதவியின் வரலாறு
நேபாள இடைக்கால அரசியலமைப்பு சட்டத்தின் படி நேபாளத்தில் சனவரி, 2007 அன்று மன்னராட்சி முறை ஒழிக்க தீர்மானிக்கப்பட்டது. நேபாளத்தின் தற்காலிக குடியரசுத் தலைவராக முன்னாள் பிரதம அமைச்சர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 28 மே 2008ல் கூடிய நேபாள நாடாளுமன்றம், ராம் பரன் யாதவ்வை, நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் நேபாளத்தில் 247 ஆண்டு கால மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவிற்கு வந்தது.
நேபாளக் குடியரசுத் தலைவர்கள் (2008 முதல் - தற்போது வரை)
எண் | பெயர் (பிறப்பு–இறப்பு) |
படம் | தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் | பதவியேற்ற நாள் | விலகிய நாள் | துணை குடியரசுத் தலைவர் | வாக்குகள் |
---|---|---|---|---|---|---|---|
1 | ராம் பரன் யாதவ் (1948–) |
![]() |
நேபாளக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2008 | 23 சூலை 2008 | 29 அக்டோபர் 2015 | பரமானந்த ஜா | 308 / 601 (2nd round) |
2 | வித்யா தேவி பண்டாரி (1961–) |
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2015 | 29 அக்டோபர் 2015 | பதவியில் | நந்த கிசோர் புன் | 327 / 601 | |
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2018 | |||||||
நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல், 2018
நேபாள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் 13 மார்ச் 2018ல் நடைபெற்றது. தேர்தலில் தற்போதைய குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி மற்றும் குமாரி லெட்சுமி ராய் போட்டியிட்டனர்.[2][3] தேர்தல் முடிவில் வித்யா தேவி பண்டாரி பெரும்பாலான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]
குடியரசுத் தலைவர் தேர்தல்
வேட்பாளர் | அரசியல் கட்சிகள் | வாக்குகள் |
---|---|---|
வித்யா தேவி பண்டாரி | மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் | |
குமாரி லெட்சுமி ராய் | நேபாளி காங்கிரஸ் | |
செல்லாத வாக்குகள் | 37 | |
மேற்கோள்கள்
- "Salary of President". Naya Patrika. 17 July 2013. http://www.nayapatrika.com/index.php?option=com_content&view=article&id=11157:2013-07-17-01-07-28&catid=56:cover-story&Itemid=75. பார்த்த நாள்: 17 July 2013.
- Nepal to hold presidential election on March 13
- President Bidya Devi Bhandari, Laxmi Rai In Race For Presidency In Nepal
- Bidya Devi Bhandari re-elected as Nepal President