நெய்தற்கலி

சங்க இலக்கியம் கலித்தொகை பாடல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நெய்தல் திணைக் கலிப்பாப் பாடல்களை நெய்தற்கலி எனக் குறிப்பிடுகின்றனர். இதில் உள்ள பாடல்கள் 33. இவை கலித்தொகை நூலில் 118 முதல் 150 எண்ணுள்ள பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பாடிய புலவர் நல்லந்துவனார்.

இக்காலத்துப் பலராலும் போற்றப்படும் அடிகள் இக் கலியில் உள்ளன.

'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;
ஆங்கு அதை அறிந்தனிர் }} ==இக் கலியின் 16 ஆம் பாடல்.

கருத்தோட்டம்

(குறிப்பு – எண்கள் நெய்தற்கலி வரிசை எண்களைக் குறிப்பன)

இரங்கல்

  • உள்ளில் உள்ளம் உள்ளுள் உவக்கும் 1
  • மாலை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்கும் 2
  • மாலையில் சான்றவர் கந்தாதல் களைந்தார் 3
  • சாயினள் வருந்தாமல் இருக்க ஊரறியத் தேரில் வருக 4
  • நாம் காம நோயில் வருந்த நெஞ்சம் அவரிடம் மகிழ்ந்திருப்பது நகைப்பிற்கு இடமானது. 5
  • கடலலை போல நெஞ்சம் அவரிடம் போய்வருகிறது. 6
  • தெய்வப்பெயரால் தெளிவித்த்தைக் காப்பாற்று. 7
  • உறவுக்கு நெஞ்சு அல்லாமல் வேறு கரி (சாட்சி) இல்லை 8
  • இனையும் என் தோழி புதுநலம் பெற நின் தேரைப் பூட்டுக. 9
  • அலை அடுப்பம்பூவுக்கு அளி செய்வது போல் நீ இவளுக்கு அளி செய். 10
  • கனவில் வந்தவன் நனவில் வரவேண்டும். 11
  • மருத்துவன் வஞ்சம் செய்வது போல் ஏமாற்ற வேண்டா. 12

உறவு

  • தலைவன் தொடுவுழி தொடுவுழி தலைவி பசலை நீங்கிற்று. 13
  • கடல் தெய்வம் காட்டி தெளிவித்தவன் அவள் ஆடும் ஊஞ்சலை ஆட்டினான். 14

வேண்டல்

  • வழிபடு தெய்வம் போல் காப்பாற்று. 15
  • பாலுண்டவர் பாத்திரத்தை வீசுவது போல் இவளை உண்டபின் விட்டுவிடாதே 16
  • மாலை நிலநடுக்கம் போல வருத்துகிறது 17
  • வாய்மைக்கண் வஞ்சம் வேண்டா 18
  • பாண்டியம் நல்லாட்சி செய்வான் பொருள்நலம் போல இவள் நலம் பெறத் தேரில் வருக. 19
  • இன்னுயிர் போத்தரும் போக்கும் மருத்துவர் ஆகாதே. 20

மடலூர்தல்

  • பாங்கர், சான்றோர், கண்டார், ஆகிய வாயில்களிடம் தான் மடலேறிப் பெற்ற பாங்கைத் தலைவன் கூறுகிறான். 21, 22, 23
  • மடலூர்ந்து வந்தவனுக்குப் பெற்றோர் மணம் முடித்து வைக்கின்றனர். 24
  • உரையாடல் பாடல்கள் 25, 26, 27, 28, 29, 30

ஆற்றுவித்தல்

  • தலைவி வருத்தத்தைக் கண்டார் கூறியது 31,
  • தோழி தலைவியை ஆற்றுவிக்கும் பாடல்கள் 32, 33

உவமைகள்

இந்தக் கலியில் வரும் உவமைகளில் சில:

  • திருமால் கையில் மாபலி நீரூற்றுவது போல் தாழம்பூ வளைந்த்து 16
  • வழிபடு தெய்வம் அணங்கு ஆகியது போல் தலைவியை வருத்தாதே 15
  • நாரை முக்கோல் அந்தணர் முதுமொழி நினைவார் போல் எக்கர் மேல் இறை கொள்ளும் 9
  • அருளரசனுக்குப் பின் அறநெறி இல்லாதவன் ஆள்வது போல் காலைக்குப் பின் மாலை ஆள்கிறது 12

குறிப்புகள்

  • நிலநடுக்கம் [1]
  • மூவேந்தர் முரசு [2]
  • மாலையில் அந்தணர் தீ வளர்த்தல் [3]
  • அன்னத்தூவி மெத்தை [4]
  • தலைவன் பிரிந்திருக்கும் காலத்தில் தலைவி பொட்டு வைத்துக்கொள்ளமாட்டாள்.[5]

புராணக் கதை

  • சிவன் கொன்றை மாலை சூடியது, மூன்று எயில்களை எரித்தது, காளைமேல் வந்தது, கங்கையைத் தலையில் அடக்கியது, பிறை அணிந்தது, ஆதிரையில் பிறந்தது, காமனை எரித்தது முதலான செய்திகள் ஒரே பாடலில் கூறப்பட்டுள்ளன. 33
  • மாயவன் மார்பில் திருமகள் 28

திருக்குறளின் தாக்கம்

கலித்தொகை அடிதிருக்குறள்நெய்தல் கலி பாடல் எண்
வேண்டிய வேண்டியாங்கு எய்தல் வாய் எனின்வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்26
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கெல்லாம் கடன்அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக்கடை22
காமக் கடும்பகையில் தோன்றினேற்கு ஏமம் எழில்நுதல் ஈத்த இம் மா (குறள் வெண்பா)காமம் உழந்து வருந்தினாற்கு ஏமம் மடல் அல்லது இல்லை வலி22

அடிக்குறிப்பு

  1. ஒருநிலையே நடுக்குறில் உலகெலாம் அச்சுறும், இருநிலம் பெயர்ந்து அன்ன 16
  2. முரசு மூன்று ஆள்பவர் 15
  3. ஐயர் அவிர் அழல் எடுப்ப ‘அரோ’ என், கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும் 13
  4. அன்ன மென் சேக்கை 29
  5. நறுநுதல் நீத்த திலகத்தள் 26
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.