நீல வாழை

நீல வாழை (Blue Banana), சூடான வாழை (Hot Banana), ஐரோப்பிய பெருநகரத் தொகுதி (European Megalopolis) அல்லது ஐரோப்பாவின் முதுகெலும்பு (European Backbone) என்பது மேற்கு ஐரோப்பாவின் 110 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, இடைவெளிவிட்ட நகரமயமானப் பகுதிகளை இணைத்து அழைக்கப்படும் நிலப்பகுதி ஆகும். வடக்கில் கிட்டத்தட்ட வடமேற்கு இங்கிலாந்து முதல் தெற்கில் மிலன் வரை நீடித்துள்ளது. இதன் வளைவில் (வாழைப்பழம் போன்ற வடிவத்தால் இவ்வாறு அழைக்கப்படலாயிற்று) பிராட்ஃபோர்ட், லீட்ஸ், லிவர்பூல், மான்செஸ்டர், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்), இலண்டன், ஆம்ஸ்டர்டம், டென் ஹாக், ராட்டர்டேம், பிரசெல்சு, ஆண்ட்வெர்ப், ஐந்தோவன், ரூர், டுசல்டோர்ஃப், கோல்ன், பிராங்க்ஃபுர்ட், லக்சம்பர்க், இசுடுட்கார்ட், இசுட்ராசுபோர்க், சூரிக், துரின், மிலன், மற்றும் செனோவா நகரங்கள் உள்ளன. இது உலகின் மிக கூடுதலான மக்கள்தொகை, நிதி மற்றும் தொழிலகங்கள் செறிவாக உள்ள நிலப்பகுதியாக விளங்குகிறது.[1][2] இத்தகைய கருத்தாக்கம் ரோஜர் புருனேயால் நிர்வகிக்கப்படும் பிரெஞ்சு நிலவியலாளர்கள் குழு ரெக்லஸ் (RECLUS) 1989ஆம் ஆண்டு உருவாக்கியது. .[3]

;நீல வாழைப் பகுதி
ஐரோப்பாவின் மக்களடர்த்தி - நீல வாழையில் மிக உயர்ந்த மக்களடர்த்தியைக் காணலாம்
உலகளவில் மக்களடர்த்தி

மேற்கோள்கள்

  1. Gert-Jan Hospers(2002). "Beyond the Blue Banana? Structural Change in Europe's Geo-Economy"(pdf). {{{booktitle}}}. 2006-09-27 அன்று அணுகப்பட்டது..
  2. Gert-Jan Hospers (2003). "Beyond the Blue Banana? Structural Change in Europe's Geo-Economy" (pdf). Intereconomics 38 (2): 76–85. doi:10.1007/BF03031774. http://web.nps.navy.mil/~relooney/3040_c805.pdf. பார்த்த நாள்: 2006-09-27.
  3. Brunet, Roger (1989) (in French). Les villes europeénnes: Rapport pour la DATAR. Montpellier: RECLUS. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:2110022000.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.