செனோவா

செனோவா (ஜெனோவா, Genoa, /ˈɛn.ə/; இத்தாலியம்: Genova, இலிகுரியா Zena; இலத்தீன்: Genua)இத்தாலியின் ஆறாவது பெரிய நகரமும் இலிகுரியாவின் தலைநகரமும் ஆகும். 243.6 km2 (94 sq mi) பரப்பளவுள்ள இதன் மக்கள்தொகை 594,904 ஆகும்.[1] செனோவாவின் நகரியப் பகுதியில் மக்கள்தொகை 800,709 ஆக உள்ளது.[2] 1.5 மில்லியனுக்கும் கூடுதலான[2] மக்கள் பெருநகர்ப் பகுதியில் வாழ்கின்றனர். நடுநிலக் கடல் பகுதியிலுள்ள பெரிய ஐரோப்பிய நகரங்களில் செனோவாவும் ஒன்று. இத்தாலியின் மிகப்பெரும் துறைமுகமாக விளங்குகிறது.

செனோவா
ஜெனோவா
கொம்யூன்
கம்யூன் டி ஜெனோவா
செனோவா படிமத்தொகுப்பு, மேல் இடதிலிருந்து வலச்சுற்றாக: செனோவா கலங்கரைவிளக்கம், பியாசா டெ பெர்ராரி, கல்லேரியா மாஸ்னி, பிரிகடா இலிகுரியா சாலை, செனோவா துறைமுகத்திலிருந்து சான் தியோடொரோ காட்சி

கொடி

சின்னம்
நாடுஇத்தாலி
மண்டலம்இலிகுரியா
மாகாணம்செனோவா (GE)
அரசு
  நகரத் தந்தைமார்கோ டோரியா
பரப்பளவு
  மொத்தம்243.60
ஏற்றம்20
மக்கள்தொகை (30 ஏப்ரல் 2014)
  மொத்தம்5,94,904
இனங்கள்செனோவாசி
நேர வலயம்CET (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு16121-16167
Dialing code010
பாதுகாவல் புனிதர்திருமுழுக்கு யோவான்
புனிதர் நாள்சூன் 24
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

இதன் பழமைவாய்ந்த சிறப்பையும் கவர்ச்சியான இடங்களையும் கருதி செனோவா லா சூப்பர்பா ("பெருமைமிகு ஒன்று") என அழைக்கப்படுகின்றது.[3] தொன்மையான பழைய செனோவாப் பகுதி 2006இல் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இந்நகரத்தின் கலை, இசை, சமையல், கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புகளால் 2004ஆம் ஆண்டு ஐரோப்பிய பண்பாட்டு தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. கொலம்பசு, நிக்கோலோ பாகானீனி ஆகியோரின் பிறந்த ஊர் இதுவாகும்.

இத்தாலியின் வடமேற்கில் மிலன்-துரின்-செனோவா தொழில் முக்கோணத்தில் அமைந்துள்ள செனோவா நாட்டின் முதன்மை பொருளியல் மையமாக விளங்குகின்றது.[4][5] இங்கு 19வது நூற்றாண்டிலிருந்தே பெரிய கப்பற் கட்டும் தொழிலகங்களும் இரும்புச்சாலைகளும் அமைந்துள்ளன; செனோவாவின் வங்கித்தொழில் நடுக்காலத்திலிருந்தே வலுவாக உள்ளது. 1407இல் நிறுவப்பட்ட செயின்ட் ஜார்ஜ் வங்கி உலகின் மிகப்பழைய வங்கிகளுள் ஒன்றாகும். செனோவா நகரத்தின் வளமைக்கு 15வது நூற்றாண்டிலிருந்தே இந்த வங்கி துணையாயிருந்திருக்கிறது.[6][7] இன்று பல இத்தாலிய முன்னணி நிறுவனங்கள் இங்கிருந்து செயல்படுகின்றன: செலக்சு ஈஎஸ்,[8] அன்சால்டோ எனர்ஜியா,[9] அன்சால்டோ எசுடீஎசு, எடுவார்டோ ராஃபினெரி கர்ரோன், பியாஜியோ ஏரோ அவற்றுள் சிலவாம்.

மேற்சான்றுகள்

  1. Population data from Istat
  2. Urbanismi in Italia, 2011
  3. "Genoa: a bloody history, a beguiling present | Italy". London: Times Online. 2004-04-25. http://www.timesonline.co.uk/tol/travel/destinations/italy/article844402.ece. பார்த்த நாள்: 2009-04-11.
  4. ‘Genoa Economy’, World66.com.
  5. ‘Italy: Industry’, Encyclopedia of the Nations, Advameg, Inc.
  6. George Macesich, Issues in money and banking, (Greenwood Publishing Group, 2000), p. 42.
  7. Alta Macadam, Northern Italy: From the Alps to Bologna, Blue Guides, 10th edn. (London: A. & C. Black, 1997).
  8. Selex ES: Company profile’ LinkedIn Corporation.
  9. Ansaldo Energia: Company profile’ LinkedIn Corporation.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.