நீர் முடிச்சு

நீர் முடிச்சு (Water knot) என்பது, தட்டையான நாடாக்களின் இரு முனைகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சாகும். இதை, நாடா முடிச்சு (tape knot), புல் முடிச்சு (grass knot), ஊடுதொடர் நுனிமுடிச்சு (overhand follow-through) போன்ற வேறு பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு. மலையேறுதலில் தாங்கு கயிறுகளை உருவாக்கும்போது இதனைப் பயன்படுத்துவர்.

நீர் முடிச்சு
பெயர்கள்நீர் முடிச்சு, நாடா முடிச்சு, வளையத் தொடுப்பு, புல் முடிச்சு, ஊடுதொடர் நுனி முடிச்சு
வகைதொடுப்பு
தொடர்புநுனி முடிச்சு, பீர் முடிச்சு, நுனித் தொடுப்பு
பொதுப் பயன்பாடுமலையேறுதலில் நாடாக்களைத் தொடுத்தல்
எச்சரிக்கைமுனைகள் நீளமாக விடப்படல் வேண்டும், முடிச்சுகள் இறுக்கப்பட்டு ஒவ்வொரு தடவை பயன்படுத்த முன்னும் பரிசோதிக்க வேண்டும். அவிழ்ப்பது கடினம்.
ABoK
  1. 296

முடிதல்

இறுக்குவதற்கு முன்னர் நீர் முடிச்சு

முதலில் ஒரு நாடாவின் முனையில் நுனி முடிச்சு ஒன்று போடப்படும். பின்னர் அடுத்த நாடாவின் முனையை எதிர்த் திசையில் இருந்து முடிச்சினுள் செலுத்தி முதல் நாடாவை தொடர்ந்து செல்லவேண்டும்.

முனைகள் 3 அங்குலமாவது நீண்டிருக்குமாறு விட்டு முழு உடல் நிறையையும் பயன்படுத்தி முடிச்சை இறுக்கிக் கொள்ளவேண்டும். மீண்டும் வழுக்கிக்கொண்டு வெளியில் வராமல் இருக்க, முனைகளை ஒட்டு நாடாக்களினால் அருகில் உள்ள நிலைப்பகுதியோடு ஒட்டிவிடலாம் அல்லது தைத்து விடலாம்.[1]

குறிப்புகள்

  1. Craig Luebben, Knots for Climbers (Evergreen, Colorado: Chockstone Press, 1993), 19.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.