நீரூர்தி

நீரூர்தி் நீரில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும் வாகனமாகும். இவை மக்களையோ பொருட்களையோ ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்லவோ, அல்லது உடற்பயிற்சிக்காகவோ, மகிழ்வாக நீர்நி்லைகளில் உலா வரவோ பயன்படலாம். சிற்றோடைகளிலும், பெரும் ஆறுகளிலும், கடலிலும், மாக்கடலிலும் செல்லவல்ல பற்பல நீருர்திகள் உள்ளன.

நீரூர்தி வகைகள்

பொதுவாக நீர் ஊர்திகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.

  • நீர் மேல் செல்லும் ஊர்திகள்: படகு, ஓடம், தோணி, மரக்கலம், பட்டம், கப்பல், நாவாய் முதலியனவும், களிப்பாக விளையாட விசைச் சிற்றுர்திகள் பலவும் உள்ளன. இவையன்றி,
  • நீருள் மூழ்கிச் செல்லும் நீர்மூழ்கிக் கலங்களும், அணு ஆற்றலால் இயங்கும் பெரும் கடற்படை நீர்மூழ்கிக்கலங்களும், அறிவியல் ஆய்வகளுக்காக நீருள் உலாவி வரும் அக்வாரிஸ் போன்ற கலங்களும், வெள்ளத்தாலோ பிற காரணங்களுக்காகவோ நீருள் மூழ்கிப் போன காடுகளில் உள்ள மரங்களை வெட்டும் நீர்மூழ்கி மரவெட்டிகளும் எனப் பல உள்ளன.

நீரூர்திகளில் சில எடுத்துக்காட்டுகள்

கடலூர்தி வணி்கம்

நீரூர்தி வரலாறு

எகிப்திய கப்பல்

நீர்மூழ்கிக்கல வரலாறு

  • 1900 அமெரிக்காவில் உள்ள நியூ 'செர்சியில் உள்ள 'சான் பி. ஃஆலண்டு என்பார் ஆக்கிய நீர்மூழ்கிக்கலமே தற்கால நீர்மூழ்கிகளின் முன்னோடி என்பார்கள்.
  • 1934 வில்லியம் 'பீ'ப் (William Beebe) என்பாரும், ஓட்டிசு 'பார்ட்டன் (Otis Barton) என்பாரும் செய்த மிகப்புகழ் பெற்ற 'பாத்தி ஸ்'வியர் (Bathysphere) (மூழ்கிகுளிக்கும் உருண்டை என்னும் பொருள் பட) என்னும் கலத்தில் கடலுக்கு அடியில் 3028 அடி சென்று சாதனை படைத்தார்கள். கடலுக்கு அடியிலே போகப்போக நீரழுத்தம் மிகக்கூடுமாதலால், அதனைத்தாங்கிச் சென்று திரும்பிய இவ்வெஃகு உருண்டைக்கலம் புகழ் பெற்றது.
  • 1943 'சாக்கஸ் கூசுட்டோ (Jacques Cousteau) கடுள் வாழ்ந்தது
  • 1955 அமெரிக்காவின் யு எசு சு நாட்டிலுசு (USS Nautilus) நீர்மூழ்கிக்கலம் முதன் முதலாக அணு ஆற்றலால் இயங்கி நிலைத்து கடலுக்கு அடியில் ஊர்ந்து இயங்க வல்லது. நீரின் மேற்புறத்திற்கு வரவே தேவையற்றது.
மாபெரும் குயின் மேரி-2 பெருங்கப்பல்

வரலாற்றில் இடம் பெற்ற நீருந்திகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.