கட்டுமரம்

கட்டுமரம் ( ஒலிப்பு) (Catamaran) என்பது ஒரே அளவிலான பட்டை உறிக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகளை இணையாக இணைத்து வைத்து கட்டப்பட்டதொரு படகு ஆகும். இதனுடைய நிலைத்தன்மையானது நீளமான கழியைக் கொண்டு படகை செலுத்துபவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. கட்டுமரம் என்பது ஒரு தமிழ்ச்சொல் ஆகும். இதனை ஆங்கிலேயர்கள் ``கேட்டமரன்’’ பெயரிட்டு அழைத்தார்கள். கட்டுமரம் என்பதற்கு ``மரங்கள் ஒன்றாகக் கட்டப்பட்ட’’ என்பது பொருளாகும். அளவில் சிறிய கட்டுமரங்கள் முதல் பெரிய கட்டுமரங்கள் வரை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[1]

  1. https://en.wikipedia.org/wiki/Catamaran
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.