நியூகாசில் பன்னாட்டு விளையாட்டு மையம்

ஹண்டர் விளையாட்டரங்கம் (Hunter Stadium) அல்லது நியூகாசில் பன்னாட்டு விளையாட்டு மையம் (Newcastle International Sports Centre) என்பது ஆத்திரேலியாவின் நியூகாசில் நகரில் அமைந்துள்ள ஒரு பல-நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இங்கு நியூகாசில் நைட்சு அணி (ரக்பி), நியூகாசில் ஜெட்சு அணி (காற்பந்து விளையாட்டுகளும் விளையாடப்படுகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுக்குச் சொந்தமான இவ்வரங்கத்தை ஹண்டர் பிராந்திய விளையாட்டு ஆணையம் நிருவகித்து வருகிறது. இவ்வரங்கத்தின் முன்னைநாள் நல்கையாளர்களின் விளம்பரங்கள் கருதி, இவ்வரங்கிற்கு முன்னர் "மாரத்தான் விளையாட்டரங்கம்" (Marathon Stadium), "எனர்ஜிஆத்திரேலியா விளையாட்டரங்கம்" EnergyAustralia Stadium), "ஆஸ்கிரிட் விளையாட்டரங்கம்" (Ausgrid Stadium) ஆகிய பெயர்கள் இருந்தன. ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பின் 2015 ஆசியக் கிண்ணப் போட்டிகளின் போது இது நியூகாசில் விளையாட்டரங்கம் எனவும் அழைக்கப்பட்டது.

ஹண்டர் விளையாட்டரங்கம்
Hunter Stadium
NISC

ஹண்டர் விளையாட்டரங்கம்
முழு பெயர் ஹண்டர் பன்னாட்டு விளையாட்டு மையம்
இடம் நியூ லாம்டன், நொயூகாசில், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
அமைவு 32°55′8″S 151°43′36″E
எழும்பச்செயல் ஆரம்பம் 1967
திறவு ஏப்ரல் 10, 1970 (1970-04-10)
சீர்படுத்தது 2003–05, 2008–11
உரிமையாளர் நிசவே அரசு
ஆளுனர் வெனியூஸ் நிசவே
தரை புல்
முன்னாள் பெயர்(கள்) பன்னாட்டு விளையாட்டு மையம் (1970–91)
மரத்தான் விளையாட்டரங்கம் (1992–2001)
எனர்ஜிஆத்திரேலியா விளையாட்டரங்கம் (2001–10)
ஆஸ்கிரிட் விளையாட்டரங்கம் (2011)
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 33,000

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.