க. சு. நவநீதகிருஷ்ண பாரதி

க. சு. நவநீதகிருஷ்ண பாரதி (1889 - 1954) ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இவர் இயற்றிய தனிச் செய்யுள்களின் தொகுப்பாகிய உலகியல் விளக்கம் என்னும் நூலின் பதிப்பாசிரியராய் விபுலானந்த அடிகள் பணியாற்றியுள்ளார். அடிகளின் பதிகத்தினையும், கடவுள் வாழ்த்தினையும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட முன்னுரையினையும் கொண்டு 1922 இல் இந்நூல் வெளியிடப்பட்டது. சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியிலும், இராமநாதன் கல்லூரியிலும் தமிழ் பண்டிதராகப் பணியாற்றினார்.[1] திருவாசகம், நன்னூல், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பாராட்டுப் பெற்றார்[2].

நவநீதகிருஷ்ண பாரதி
பிறப்பு1889
கரவட்டங்குடி, கிருஷ்ணாபுரம், தமிழ்நாடு
இறப்பு1954 (அகவை 6465)
இருப்பிடம்மாவிட்டபுரம், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிதமிழாசிரியர், புலவர்
அறியப்படுவதுதமிழறிஞர்
பெற்றோர்சுப்பிரமணிய பாரதி
வாழ்க்கைத்
துணை
சௌந்தரநாயகி
பிள்ளைகள்பத்மாவதி பூர்ணானந்தா

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாண மாவட்டம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ண பாரதி தமிழ்நாடு, கிருஷ்ணாபுரம், கரவட்டங்குடியில் சுப்பிரமணிய பாரதி என்பவருக்குப் பிறந்தார்.[3] இளம் வயதில் இலக்கணம், இலக்கியம், தருக்கம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் திருமுறை ஆய்வில் ஈடுபட்டார்.[3] 1917 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசானாகப் பணியாற்ற இலங்கை வந்தார்.[3] தேசநேசன் இதழில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[3] இவரது மனைவி பெயர் சவுந்தரநாயகி. சமூகசேவகி காலஞ்சென்ற பத்மாவதி பூர்ணானந்தா இவர்களது மகள் ஆவார்.[4]

எழுதிய நூல்கள்

  • உலகியல் விளக்கம் (செய்யுள் தொகுப்பு), 1922
  • பாரதீயம் (3 பாகங்கள், இலக்கண நூல்), 1949
  • திருவாசகம் ஆராய்ச்சிப் பேருரை, தெல்லிப்பழை, 1954
  • பறம்புமலைப் பாரி (செய்யுள்கள்)[1]
  • புத்திளஞ் செழுங்கதிர்ச் செல்வம் (செய்யுள்கள்)[3]
  • திருவடிக் கதம்பம் (செய்யுள்கள்)[1]
  • காந்தி வெண்பா (அச்சில் வெளிவரவில்லை)[1]

பட்டங்கள்

  • பண்டிதர்
  • புலவர்மணி

மேற்கோள்கள்

  1. ஈழகேசரி வெள்ளிவிழா மலர். யாழ்ப்பாணம்: ஈழகேசரி. 1956. பக். பக். 209. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1956.
  2. உரையாசிரியர்கள்
  3. நாவலர் மாநாடு விழா மலர் 1969. 1969. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1969.
  4. இறைபதமடைந்த சமூகசேவகி பத்மாவதி பூரணானந்தா, தினக்குரல், சூன் 10, 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.