நளகூபன்

நளகூபன் குபேரனின் மைந்தன் ஆவார். இவருக்கு மணிக்ரீவன் என்ற சகோதரனும் உண்டு. நாரத முனிவரின் சாபத்தினால் கோகுலத்தில் மருதமரமாக இவர்கள் நின்றார்கள். கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு இவர்களுக்கு மோட்சம் வழங்கியதாக பெரியாழ்வார் குறிப்பிடுகிறார்.

புராணக் கதை

நளகூபன், மணிக்ரீவன் இருவம் குபேரனின் பிள்ளைகள் என்பதால் தங்களது பெருஞ்செல்வதினை நினைத்து ஆணவம் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் கந்தர்வப்பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் கந்தர்வ பெண்கள் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டனர்.

ஆனால் நளகூபனும் மணிக்கரீவனும் ஆடையின்றி தடாகத்திலேயே இருந்தார்கள். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாற சாபமிட்டார். அதன் பின் இருவரும் விமோசனம் வேண்டினர். அதற்கு நாரதர் திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் மோட்சம் கிடைக்குமென அருள் செய்தார்.

அதுபோலவே கிருஷ்ண அவதாரத்தில் குறும்பு செய்த கிருஷ்ணனை அவரது அன்னை யசோதை உரலில் கட்டிப்போட்டார். கிருஷ்ணன் அந்த உரலை இழுத்துச் சென்ற இரட்டை மரங்களாக நின்றிருந்த நளகூபன் மணிக்கீவனுக்கு மோட்சம் தந்தார்.


ஆதாரங்கள்

    வெளி இணைப்புகள்


    இவற்றையும் பார்க்கவும்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.