நற்குடி வேளாளர் வரலாறு (நூல்)

நற்குடி வேளாளர் வரலாறு என்பது பாண்டியர் வரலாற்றைக் கூறும் குடிமரபு நூலாகும். இந்நூல், நன்குடி வேளாளர்களால் பாடப்பட்ட பழங்கால நாட்டுப்புறப்பாடல்களாகும். இந்தப் பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்த 1035 பாடல்களைக் கொண்டு ஆறுமுக நயினார் அவர்கள், 1920ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு இந்நூலை வெளியிட்டார். இதன் படி, பாண்டியரின் ஐந்து பிரிவில் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக்கொள்வதைக் கைவிடவில்லை. இதன் விதம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா இருங்கோவேள் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது. மொத்தத்தில் இது 201 பேரை பாண்டியர் மன்னர்களாகக் குறிப்பிடுகிறது.

மூவேந்தர் கதை

மூவேந்தர் கதை என்பது கர்ண தலைமுறைக் கதையாக பாண்டியர் தலைமையில் மூவேந்தர்களும் தமையன்களாக கொற்கையிலிருந்து ஆண்டதாகவும் பின்னர் அதிலிருந்து சேரரும் சோழரும் பிரிந்ததாகக் கூறப்படும் மரபுவழிக் கதையாகும். இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நூலில் ஒரு பாடலும் உண்டு.[1]

நூலில் உள்ள செய்திகள்

கோசாம்பியைத் தலைநகராகக் கொண்டு வடநாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் உதயணன் கி.மு.701இல் (கலியாண்டு 2400) ஆரியர்களைப் போரிட்டு வென்றான். அவன் ஆட்சி செய்திருந்தால் கி.பி. 199இல் குப்தர் தலையெடுக்காமல் தடுத்திருக்கலாம். பணிந்து பேசிய ஆரியர்களை நம்பி அடங்கிப் போன பண்பாட்டு அடிமைத்தனமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என இந்நூல் கூறுகிறது.[2][3][4]

பட்டியல்

இந்நூலில், பாண்டிய மன்னர்களின் வரிசை தொடர்ச்சியாக இல்லாமல் இருந்தன. அதைத்தன் ஆய்வு கருத்துகளின் மூலம் முனைவர் இரா. மதிவாணன் அவர்கள், தான் எழுதிய கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் எனும் நூலில் முழுமைப்படுத்தினார்.[4] அவர் முழுமைப்படுத்திய பட்டியலுக்கும் நற்குடி வேளாளர்கள் பாடிய பாடலுக்கும் சிற்சில வேறுபாடுகள் இருந்தன.

இப்பட்டியலின் மூலம்[5][4]
  1. கி.மு. 2082 - முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன்
  2. கி.மு. 1932 - மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன்
  3. கி.மு. 1002 - 960 - திருவழுதி - 45 ஆவது பாண்டியன்
  4. கி.மு. 910 - 854 - வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன்
  5. கி.மு. 884 -832 - பாண்டீசன் (நிலந் தருதிருவின்பாண்டியன்) - 50 ஆவது பாண்டியன்
  6. கி.மு. 500 - 450 - பல்சாலை முதுகுடுமி பெரு வழுதி - 66 ஆவது பாண்டியன்
  7. கி.மு. 450 - 400 - கருங்கை யொளைவாட் பெரும் பெயர் வழுதி - 67 ஆவது பாண்டியன்
  8. கி.மு. 400 - 380 - போர்வல் வழுதி - 68 ஆவது பாண்டியன்
  9. கி.மு. 380 - 340 - கொற்கை வழுதி நற்றேர் வழுதி - 69 ஆவது பாண்டியன்
  10. கி.மு. 340 - 302 - தேவ பாண்டியன் - 70 ஆவது பாண்டியன்
  11. கி.மு. 302 - 270 - செய புஞ்சன் - 71 ஆவது பாண்டியன்
  12. கி.மு. 270 - 245 - பசும் பூண் பாண்டியன் - 72 ஆவது பாண்டியன்
  13. கி.மு. 245 - 220 - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் - 73 ஆவது பாண்டியன்
  14. கி.மு. 220 - 200 - பாண்டியன் நன்மாறன் - 74 ஆவது பாண்டியன்
  15. கி.மு. 200 - 180 - கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன்
  16. கி.மு. 180 - 160 - மருங்கை வழுதி - 76 ஆவது பாண்டியன்
  17. கி.மு. 160 - 150 - பாண்டியன் இத்தமன் புலிமான் வழுதி - 77ஆவது பாண்டியன்
  18. கி.மு. 150 - 140 - பாண்டியன் கீரன் சாத்தன் - 78 ஆவது பாண்டியன்
  19. கி.மு. 120 - 100 - பாண்டியன் ஏனாதி (நெடுங் கண்ணன்) - 80 ஆவது பாண்டியன்
  20. கி.மு. 100 - 87 - கொற்கை வழுதி(பசும்பூண்பாண்டியன் II) - 81ஆவது பாண்டியன்
  21. கி.மு. 87 - 62 - தேவபூடணன்(இலவந்திகைதூஞ்சியநன்மாறன் - 82ஆவது பாண்டியன்
  22. கி.மு. 62 - 42 - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் - 83ஆவது பாண்டியன்
  23. கி.மு. 42 - 1 - கானப்பேரெயில் கட உக்கி பெருவழுதி - 84 ஆவது பாண்டியன்
  24. கி.மு. 1 - 30 - பாண்டியன் அறிவுடைநம்பி - 85ஆவது பாண்டியன்
  25. கி.பி. 30 - 60 - வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி - 86 ஆவது
  26. கி.பி. 142 - ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் - 87 ஆவது பாண்டியன்
  27. கி.பி. 150 - வெற்றிவேற் செழியன் - 88 ஆவது பாண்டியன்
  28. கி.பி. 172 - நெடுஞ்செழியன் II - 89 ஆவது பாண்டியன்
  29. கி.பி. 198 - உக்கிர மாறன் - 90 ஆவது பாண்டியன்
  30. கி.பி. 220 - 250 பன்னாடு தந்த மாறன் வழுதி - 91 ஆவது பாண்டியன்
  31. கி.பி.250 - 270 கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 92 ஆவது பாண்டியன்
  32. கி.பி. 270 - 297 தென்னவன் கோ - 93 ஆவது பாண்டியன்
  33. கி.பி. 298 - 310 பராக்கிரம பாகு (மானாபரணன்) - 94 ஆவது பாண்டியன்
  34. நல்வழுதி கலியன் கூத்தன் - 95 ஆவது பாண்டியன்
  35. கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன்
  36. பொற்கைப் பாண்டியன் - 97 ஆவது பாண்டியன்
  37. பாண்டியன் மதிவாணன் - 98 ஆவது பாண்டியன்
  38. கி.பி. 475 -490 கடுங்கோன் - 103 ஆவது பாண்டியன்
  39. கி.பி. 498 - உக்கிரபாண்டியன் - 104 ஆவது பாண்டியன்
  40. கி.பி. 498 - 540 - சோம சுந்தர பாண்டியன் - 105 ஆவது பாண்டியன்

மேற்கோள்கள்

  1. தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
    மாறன் வழுதி மாறன் திரையன்
    மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
    தமிழ்மூ வரசிவர் தாமா வாரே
    :::::::::- நற்குடி வேளாளர் வரலாறு ஒப்பாயிரம்
  2. பண்டை நாலறு நூறாண்டினாகரிறை பாடலிக்க ணளவில் படை
    விண்டிருந்தவடவர்படை தடுத்ததமிழ்வேந்தர் முப்பத்து முந்நூற்றுமேற்
    கொண்டுகுத்தரை யடக்கிடாததெனை கூடுநின்ற வடவோர் வழித்
    தொண்டராயதிறன் பின்னர் சாங்கரடி தொத்தினார்
    - நற்குடி வேளாளர் வரலாறு(ந.வே.வ.414)
  3. முனைவர் இரா. மதிவாணன். கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும்.
  4. மு.இராமசாமி (1976). "நன்குமடி-நற்குடி வேளாளர் வரலாறு". ம.தி.தா. இந்துக்கல்லூரி ஆண்டு மலர். doi:12 சூலை 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.